அகர் நகரம்
அகர் | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 23°42′59″N 76°00′59″E / 23.71639°N 76.01639°E | |
| நாடு | |
| மாநிலம் | மத்தியப் பிரதேசம் |
| மாவட்டம் | அகர் மால்வா மாவட்டம் |
| ஏற்றம் | 505 m (1,657 ft) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 37,950 |
| மொழிகள் | |
| • அலுவல் மொழிகள் | இந்தி, மாளவ மொழி |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
| அஞ்சல் சுட்டு எண் | 465441 |
| ஐஎசுஓ 3166 குறியீடு | ISO 3166-2:IN |
| வாகனப் பதிவு | MP-70 |
| அருகமைந்த நகரங்காள் | உஜ்ஜைன், இந்தூர், மண்டோசோர் |
| எழுத்தறிவு | 65%% |
| மக்களவை தொகுதி | தீவாசு மக்களவைத் தொகுதி |
| இணையதளம் | https://agarmalwa.nic.in/ |
அகர் (Agar), இந்தியாவின் மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள அகர் மால்வா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாநிலத் தலைநகரான போபாலிர்ந்து 184 கிலோ மீட்டர் தொலைவிலும்; உஜ்ஜைன் நகரத்திலிருந்து 64 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் உஜ்ஜைன்-கோட்டா நகரங்களுக்கு இடையே செல்லும் மாநில நெடுஞ்சாலை எண் 27ல் அமைந்துள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 18 வார்டுகளும், 7,349 குடியிருப்புகளும் கொண்ட அகர் நகரத்தின் மக்கள் தொகை 37,917 ஆகும். அதில் 19,607 ஆண்கள் மற்றும் 18,310 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.90 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 934 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 80.29 % வீதம் உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13.81 % மற்றும் 1.30 % வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 68.69%, இசுலாமியர் 25.87%, சமணர்கள் 5.08%, பௌத்தர்கள் மற்றும் பிற சமயத்தினர் 0.40% வீதம் உள்ளனர்.[1]இந்நகரத்தில் மாளவ மொழி, வட்டார மொழியாகப் பேசப்படுகிறது.
போக்குவரத்து
[தொகு]மத்தியப் பிரதேசம் மற்றும் இராஜஸ்தான் மாநிலங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை எண் 552G அகர் நகரம் வழியாகச் செல்கிறது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Agar Municipality City Population Census 2011-2025 | Madhya Pradesh". www.census2011.co.in. Retrieved 2025-04-22.
- ↑ "National Highway 552G (India)", Wikipedia (in ஆங்கிலம்), 2025-02-27, retrieved 2025-04-22