உள்ளடக்கத்துக்குச் செல்

அக்கிதம் நாராயணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அக்கிதம் நாராயணன்
பிறப்பு1939 (அகவை 85–86)
கேரளம், இந்தியா
தேசியம் இந்தியா
அறியப்படுவதுஓவியக் கலை
விருதுகள்

அக்கிதம் நாராயணன் (Akkitham Narayanan) (பிறப்பு 1939) பாரிசைத் தளமாகக் கொண்ட கேரளாவைச் சேர்ந்த இந்திய ஓவியர் ஆவார். கே. சி. எஸ். பணிக்கர், டி. பி. ராய் சௌத்தரி மற்றும் ஜீன் பெர்த்தோல் போன்ற கலைஞர்களின் மாணவரான நாராயணனின் ஓவியங்கள் இந்தியா, பிரான்சு, யப்பான், போலந்து மற்றும் ஜெர்மனி போன்ற பல நாடுகளில் உள்ள பல்வேறு அருங்காட்சியகங்கள் மற்றும் காட்சியகங்களில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. சென்னை, லலித் கலா அகாதமி, கேரள லலித் கலா அகாதமி விருது , ராஜா ரவி வர்மா விருது மற்றும் காக்னெஸ்-சுர்-மெர் சர்வதேச ஓவிய விழா விருது ஆகியவற்றை மூன்று முறை பெற்றுள்ளார்.

வாழ்க்கை வரலாறு

[தொகு]

அக்கிதம் நாராயணன், 1939 ஆம் ஆண்டில்[1] தென்னிந்திய மாநிலமான கேரளாவில் பாலக்காடு மாவட்டத்தில் குமாரநல்லூர் அருகே உள்ள அமெட்டிக்கரை என்னும் ஊரில் அக்கித்தத்து மனையில் வாசுதேவன் நம்பூதிரி மற்றும் செக்கூர் மனைக்கல் பார்வதி அந்தர்ஜனம் ஆகியோருக்கு பிறந்தார்.[2] 1956 ஆம் ஆண்டில், சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் சேர்ந்தார். அங்கு 1961 ஆம் ஆண்டில் சான்றிதழ் பெற்றார். இந்திய அரசின் உதவித்தொகையைப் பெற்ற பிறகு, 1964 வரை மேம்பட்ட படிப்பை முடித்தார்.[3][4] அரசு கவின்கலைக் கல்லூரியில் படிக்கும்போது அப்போதைய முதல்வர் டி. பி. ராய் சௌத்தரி மற்றும் நிறுவனத்தின் துணை முதல்வராக இருந்த கே. சி. எஸ். பணிக்கர் ஆகிய இருவரும் இவருக்கு வழிகாட்டியாக இருந்தனர். 1966 இல் சோழ மண்டல ஓவியர்கள் கிராமத்தை நிறுவுவதில் பணிக்கருக்கு உதவியாக இருந்தார்.[5][6] இதற்கிடையில், நாராயணன் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் சிறிது காலம் பத்திக் ஓவிய ஆசிரியராக பணியாற்றினார். பிரான்ஸ் அரசாங்கத்திடமிருந்து உதவித் தொகையைப்பெற்று பாரிஸுக்குச் சென்று எகோல் டெஸ் பியூக்ஸ்-கலைப் பள்ளியில் படித்தார். அங்கு 1970 வரை பயின்றார். அவர் நிறுவனத்தில் ஜீன் பெர்த்தோலின் கீழ் நினைவுச்சின்னக் கலையையும், லூசியன் கோட்டேவின் கீழ் பொறிக்கும் கலையையும் கற்றார்.[4] பின்னர், நாராயணன் பாரிசிலேயே வசிக்க அங்கேயே குடியேறினார்.[7][8]

புகழ்பெற்ற மலையாளக் கவிஞர் அக்கிதம் அச்சுதன் நம்பூதிரி நாராயணனின் மூத்த சகோதரர் ஆவார்.[9]

விருதுகள்

[தொகு]

நாராயணன் 1963 ஆம் ஆண்டில் சென்னை லலித் கலா அகாதமி விருதை 1965 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை வென்றார்.[1] இதற்கிடையில், 1965 ஆம் ஆண்டில் அகாதமியின் இளம் ஓவியர்கள் மற்றும் சிற்பிகள் விருதைப் பெற்றார். 1972 ஆம் ஆண்டில், 4 வது சர்வதேச ஓவிய விழாவில் காக்னெஸ்-சுர் _ மெர் என்ற விருதைப் பெற்றார். கேரள லலித் கலா அகாதமி இவருக்கு 2009 ஆம் ஆண்டில் கே. சி. எஸ். பணிக்கர் புரஸ்காரம் விருது வழங்கியது.[10] 2017 ஆம் ஆண்டில் அகாதமி மீண்டும் நாராயணனுக்கு ராஜா ரவி வர்மா விருதை வழங்கியது.[5] கே. என். ஷாஜி இயக்கத்தில் நாராயணனின் வாழ்க்கை குறித்த 27 நிமிட ஆவணப்படத்தையும் கேரள லலித் கலா அகாதமி தயாரித்துள்ளது.[11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Akkitham Narayanan - Safronart profile". Saffronart. 2019-03-14. Retrieved 2019-03-14.
  2. "Padma Shri for Akkitham Achuthan Namboothiri". Mathrubhumi (in ஆங்கிலம்). 25 January 2017. Retrieved 2019-03-14.
  3. "Reminiscences" (PDF). akkitham.in. 2019-03-14. Retrieved 2019-03-14.
  4. 4.0 4.1 "Profile - Cholamandalam". Cholamandalam Artists' Village. 2019-03-14. Retrieved 2019-03-14.
  5. 5.0 5.1 Issac, Shruthi (2017-02-13). "Art of lyrical intuition". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2019-03-14.
  6. "Interview" (PDF). akkitham.in. 2019-03-14. Retrieved 2019-03-14.
  7. "Akkitham Narayanan Namboothiri - biography". Akkitham (in ஆங்கிலம்). 2019-03-14. Retrieved 2019-03-14.
  8. "Akkitham Narayanan - Wide Walls". Widewalls. 2019-03-14. Retrieved 2019-03-14.
  9. Anoop, Aabha (2015-09-20). "Poet's life, as seen by his daughter". The Hindu (in Indian English). Retrieved 2019-03-14.
  10. "State Awards - Kerala Lalithakala Akademi". www.lalithkala.org. Retrieved 2019-03-14.
  11. "Travelling with art from Kumaranalloor to Paris". The Hindu (in Indian English). 2019-01-21. Retrieved 2019-03-14.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=அக்கிதம்_நாராயணன்&oldid=4338765" இலிருந்து மீள்விக்கப்பட்டது