ஆர். கே. சிறீராம்குமார்
ஆர். கே. சிறீராம்குமார் | |
---|---|
![]() ஆர். கே. சிறீராம்குமார் கருநாடக இசையின் ஒரு முக்கிய வயலின் கலைஞர் ஆவார். | |
பின்னணித் தகவல்கள் | |
பிறப்பு | சென்னை, தமிழ்நாடு | 4 அக்டோபர் 1966
இசை வடிவங்கள் | கருநாடக இசை |
தொழில்(கள்) | இசைக்கலைஞர், பாடகர் |
இசைக்கருவி(கள்) | வயலின் கலைஞர் |
இசைத்துறையில் | 1983–தற்போது |
இணையதளம் | www |
ஆர். கே. சிறீராம்குமார் (R. K. Shriramkumar, பிறப்பு 4 அக்டோபர் 1966) என்பவர் கருநாடக இசையில் ஒரு திறமையான வயலின் கலைஞர் ஆவார். [1] இவர் கருநாடகத்தைச் சேர்ந்த ருத்ரபட்டிண இசைப் பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் வயலின் கலைஞர் ஆர். கே. வெங்கடராம சாஸ்திரியின் பேரனும், ஆர். கே. ஸ்ரீகண்டனின் பேரனும் ஆவார். 2025 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதுக்கு ஆர்.கே. சிறீராம்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.[2]
அறிமுகம்
[தொகு]ருத்ரபட்ணம் கிருஷ்ணமூர்த்தி சிறீராம்குமார், குசுமா கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஆர். வி. கிருஷ்ணமூர்த்தி இணையருக்கு 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் நாள் பிறந்தார். இவரது தாத்தா வயலின் கலைஞர் ஆர். கே. வெங்கடராம சாஸ்திரி ஆவார். அவர் ஆர். கே. ஸ்ரீகண்டனின் சகோதரரும் குருவும் ஆவார். இவர் இசைப் பயிற்சியை துவக்கத்தில் சாவித்ரி சத்தியமூர்த்தியிடமிருந்தும், தன் தாத்தா ஆர். கே. வெங்கடராம சாஸ்திரியிடமிருந்தும் பெற்றார். இவர் டி. கே. ஜெயராமனிடம் குரல் இசையிலும் பயிற்சி பெற்று வருகிறார், தற்போது வி.வி. சுப்பிரமணியத்திடம் வழிகாட்டுதலையும் பெற்றுவருகிறார்.[சான்று தேவை]
சிறீராம்குமார் தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளியில் பயின்றார்.[சான்று தேவை]
கலை வாழ்க்கை
[தொகு]இவர் தனிக் கச்சேரிகள் மட்டுமின்றி, டி. கே. ஜெயராமன், தா. கி. பட்டம்மாள், ம. ச. சுப்புலட்சுமி, கே. வி. நாராயணசுவாமி, செம்மங்குடி சீனிவாச ஐயர், டி. பிருந்தா, த. விசுவநாதன், எஸ். பாலச்சந்தர் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்களுடன் கச்சேரிகளுக்குச் சென்றுள்ளார்.[சான்று தேவை]
இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக தியாகராஜர் ஆராதனை விழா, சென்னை மியூசிக் அகாதெமி, சண்முகானந்த சங்கீத சபா, சங்கீத நாடக அகாதமி, ஐ.சி.சி.ஆர், ஐ.டி.சி சங்கீத சம்மேளனம், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, அகில இந்திய வானொலி, தூர்தர்சன் உள்ளிட்ட இந்தியாவில் உள்ள அமைப்புகள் மற்றும் விழாக்களில் இசை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.[சான்று தேவை]
இவர் புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் இல்லத்தில், 1988 இல் கீதா ராஜசேகருடனும், 1995 இல் செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயருடனும் இணைந்து, அப்போதைய இந்தியப் பிரதமர் இராஜீவ் காந்தி மற்றும் அப்போதைய இந்தியக் குடியரசுத் தலைவர்கள் இரா. வெங்கட்ராமன் மற்றும் சங்கர் தயாள் சர்மா ஆகியோரின் முன்னிலையில் நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார்.
இவர் கீதா இராஜசேகர், விஜய் சிவா, சஞ்சய் சுப்ரமண்யன், கே. வி. நாராயணசுவாமி, எஸ். பாலச்சந்தர், டி. என். சேசகோபாலன், என். ரவிகிரண், பி. உன்னிகிருஷ்ணன், டி. எம். கிருஷ்ணா ஆகியோருடன் அமெரிக்கா, ஆத்திரேலியா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேசியா, மொரீசியசு, இலங்கை, மஸ்கட் ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ளார். இவர் சஞ்சய் சுப்பிரமணியனுடன் சேர்ந்து பாரிசில் உள்ள தியேட்டர் டி லா வில்லேவுக்காக நிகழ்ச்சி நடத்தியுள்ளார்.[சான்று தேவை]
அம்ரிதா முரளி உட்பட பல வளர்ந்து வரும் இசைக்கலைஞர்களுக்கு சிறீராம்குமார் ஆசிரியராக உள்ளார். [3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]
சிறீராம்குமார் சென்னைப் பல்கலைக் கழக கணிதப் பட்டதாரி ஆவார். தமிழ்நாட்டின் சென்னையில் வயலின், கருநாடக குரல் இசை ஆகிய இரண்டையும் கற்பிக்கிறார். சிறீராம் தனது ஓய்வு நேரங்களில் பல இசை நிகழ்ச்சிகளுக்கு சென்றுவருகிறார். பல முக்கிய கலைஞர்களுக்காக ஆண்டுதோறும் உலகம் முழுவதும் இசைப் பயணம் மேற்கொள்கிறார். தா. கி. பட்டம்மாள், ம. ச. சுப்புலட்சுமி ஆகிய இருவரையும் தன் குருக்களாக கருதுகிறார். 2009 பெப்ரவரியில், சிறீகுமார் அகிலாவை மணந்தார்.[சான்று தேவை]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "On a spiritual trip". தி இந்து. 16 June 2011. Archived from the original on 17 June 2011.
- ↑ "மியூசிக் அகாடமியின் 99-வது ஆண்டு விருதுகள் அறிவிப்பு: ஸ்ரீராம்குமாருக்கு 'சங்கீத கலாநிதி' ஊர்மிளாவுக்கு 'நிருத்திய கலாநிதி'". Hindu Tamil Thisai. 2025-03-24. Retrieved 2025-03-25.
- ↑ "Amritha Murali - an accomplished musician".