இந்தியாவின் நிர்வாக அலகுகள்
இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும் | |
---|---|
வகை | மாநிலங்கள் |
அமைவிடம் | இந்தியக் குடியரசு |
எண்ணிக்கை | 28 மாநிலங்கள் 8 ஒன்றியப் பகுதிகள் |
மக்கள்தொகை | மாநிலங்கள்: சிக்கிம் - 610,577 (குறைவு) உத்தரப் பிரதேசம் - 199,812,341 (அதிகம்) ஒன்றியப் பகுதிகள்: இலட்சத்தீவுகள் - 64,473 (குறைவு) தில்லி - 16,787,941 (அதிகம்) |
பரப்புகள் | மாநிலங்கள்: கோவா - 3,702 km2 (1,429 sq mi) (சிறியது) இராசத்தான் - 342,269 km2 (132,151 sq mi) (பெரியது) ஒன்றியப் பகுதிகள்: இலட்சத்தீவுகள் - 32 km2 (12 sq mi) (சிறியது) லடாக் - 59,146 km2 (22,836 sq mi) (பெரியது) |
அரசு | மாநில அரசுகள் ஒன்றிய அரசாங்கங்கள் (ஒன்றியப் பகுதிகள்) |
உட்பிரிவுகள் | பிரிவுகள் மாவட்டங்கள் |
இந்தியாவின் நிர்வாக அலகுகள் (Administrative divisions of India), இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் இந்தியாவை நிர்வகிக்க 4 அடுக்கு கொண்ட நிர்வாக அலகுகள் உள்ளது. அவைகள்:
- இந்திய அரசு - இந்தியா முழுமைக்குமானது
- மாநில அரசுகள் மற்றும் ஒன்றியப் பகுதிகளின் அரசுகள்
- வருவாய் கோட்டம்
- மாவட்டங்கள் அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் (இஆப & தாலுகா அளவில் வருவாய் வட்டாச்சியர்
- குறுவட்டம்
- வருவாய் கிராமம்
- மாநகராட்சிகள்
- நகராட்சிகள்
- பேரூராட்சிகள்
- ஊராட்சி ஒன்றியங்கள்
- கிராம ஊராட்சிகள்
இந்தியா முழுமைக்கும் நிர்வகிக்க இந்திய அரசும், மாநில & ஒன்றியப் பகுதிகளை நிர்வகிக்க மாநில மற்றும் ஒன்றியப் பகுதி அரசுகளும், மாவட்டங்களை நிர்வகிக்க இஆப தரத்தில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களும், உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்களும், ஊராட்சிப் பகுதிகளை நிர்வகிக்க மாவட்ட ஊராட்சித் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்கள் தலைமையில் குழுக்கள் உள்ளது.
ஆந்திரம் மற்றும் தெலங்கானா மாநிலஙகளில் வருவாய் வட்டங்களுக்கு மாற்றாக மண்டல்கள் எனும் நிர்வாக அலகுகள் உள்ளது.
தன்னாட்சி நிர்வாகப் பகுதிகள்
[தொகு]இந்தியாவின் மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடிகள் நிறைந்த வடகிழக்கு இந்தியா மற்றும் லடாக் போன்ற பகுதிகளின் மலை மாவட்டங்களை நிர்வகிக்க மலைவாழ் பழங்குடி மக்களைக் கொண்ட தன்னாட்சி நிர்வாகக் குழுக்கள் செயல்படுகிறது.
இந்தியாவின் புவியியல் பகுதிகள்
[தொகு]இந்தியாவின் வரலாற்றுப் பகுதிகள்
[தொகு]- பூர்வாஞ்சல்
- தோவாப்
- அவத்
- பகேல்கண்ட்
- ரோகில்கண்ட்
- சம்பல் பிரதேசம்
- விந்தியப் பிரதேசம்
- தக்காணப் பிரதேசம்
- மால்வா, மத்தியப் பிரதேசம்
- மால்வா (பஞ்சாப்)
- செகாவதி பிரதேசம்
- மேவார் பிரதேசம்
- மார்வார் பிரதேசம்
- சௌராஷ்டிரம்
- விதர்பா
- மராத்வாடா
- காந்தேஷ் பிரதேசம்
- கொங்கணம்
- சோட்டா நாக்பூர் மேட்டுநிலம்