உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய-கயானா மக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய-கயானியர்கள்
மொத்த மக்கள்தொகை
297,493 (2012 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு)
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
கயானா:
  • கிழக்கு பெர்பிஸ்-கோரென்டைன் எஸ்சிகிபோ தீவுகள்-மேற்கு டெமராரா டெமராரா-மஹைக்கா மஹைக்கா-பெர்பிஸ்பொமரூன்-சுபெனாம் மேல் டெமராரா-பெர்பிஸ்
வெளிநாடுகள்:
மொழி(கள்)
காலத்துவ மொழிகள்:
தென் இந்திய மொழிகள்:
சமயங்கள்
முதன்மையானது: இந்து சமயம்
சிறுபான்மை: இசுலாம் · கிறிஸ்தவம் · மற்றும் பிற
தொடர்புள்ள இனக்குழுக்கள்

இந்திய-கயான மக்கள் (Indo-Guyanese) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கயான குடிமக்கள் ஆவர். இவர்கள் இந்தியா மற்றும் பரந்த துணைக்கண்டத்தில் தங்கள் வம்சாவளியைக் கண்டறிந்துள்ளனர். இவர்கள் 1838 ஆம் ஆண்டு தொடங்கி பிரித்தானிய ஆட்சியின் போது இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் குடியேறியவர்களின் வழித்தோன்றல்கள் ஆவர்.

கயானாவில் உள்ள ஒப்பந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் வட இந்தியாவிலிருந்து வந்தவர்கள். குறிப்பாக இன்றைய உத்தரப் பிரதேசம், பீகார் மற்றும் சார்க்கண்டு மாநிலங்களின் இந்தி பேசும் பகுதியில் உள்ள போஜ்பூர் மற்றும் அவத் பகுதிகளிலிருந்து வந்தவர்களாக இருக்கின்றனர். ஒரு சிலர் தென்னிந்தியாவிலிருந்தும் வந்துள்ளனர்.[1] தெற்கு ஆசியாவின் பிற பகுதிகளிலிருந்தும் தொழிலாளர்களாக புலம்பெயர்ந்தவர்களாக இருக்கின்றனர். அரசியல் எழுச்சி, 1857, சிப்பாய்க் கிளர்ச்சியின் விளைவுகள் மற்றும் பஞ்சம் ஆகியவற்றால் தூண்டப்பட்ட 19 ஆம் நூற்றாண்டில் பெரும்பாலான இந்தியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக இங்கு வந்தனர். வணிகர்கள், நில உரிமையாளர்கள் மற்றும் விவசாயிகள் போன்ற உயர் சமூக அந்தஸ்துள்ள மற்றவர்கள் இதே போன்ற பல காரணிகளால் இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.[2]

அமெரிக்க ஐக்கிய நாடுகள், கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளிலும் இந்திய-கயானியர்கள் அதிகளவில் புலம்பெயர்ந்தோர் காணப்படுகின்றனர்.[3]

வரலாறு

[தொகு]

ஆப்பிரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்ட தொழிலாளர்களை அடிமைப்படுத்துவதை சட்டவிரோதமாக்கிய 1830 களில் பிரித்தனின் முடிவால் அதன் ஆளுமையிலிருக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு இந்தியக் குடியேற்றம் தூண்டப்பட்டது. புதிதாக விடுதலை பெற்ற ஆப்பிரிக்கர்கள் தங்கள் வாழ்விடத்தை தேர்வுசெய்து கொண்டனர். இதன் காரணமாக சீனித் தோட்டங்களில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள் வெவ்வேறு பகுடிகளுக்குக் குடியேறினர். தோட்ட உரிமையாளர்கள் தங்கள் தோட்டங்களுக்கு பணி புரிய மற்ற நாடுகளிலிருந்து ஆட்சேர்ப்பு செய்த பிறகு, இந்தியா போன்ற பிரித்தானிய காலனித்துவத்தின் மீது அவர்கள் கவனம் திரும்பியது.

பிரித்தானிய கயானாவில் அடிமைத்தனத்திற்கான மாற்று அமைப்பாக ஒப்பந்த தொழிலாளர் அமைப்பு மாறியது. 75 ஆண்டுகளாக நீடித்துவந்த இந்த ஒப்பந்த அடிமைத்தன முறை அதன் சொந்த வடிவிலான அநீதிகளை முன்வைத்து, இந்திய தேசியவாதிகளுடன் மோதலை உருவாக்கியது. 1917இல் அதன் முடிவுக்கு அவர்கள் அழுத்தம் கொடுத்தனர். அடிமைத்தனத்திற்கும் ஒப்பந்த அடிப்படையில் குடியேறியவர்களுக்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், இந்தியாவில் இருந்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் குடியேற்றத்திற்கு ஒப்புக் கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு தோட்டத்துடன் பிணைக்கப்பட்ட ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டனர். அதே நேரத்தில் ஒரு சிறிய, நிலையான தினசரி ஊதியத்தை சம்பாதித்தனர். கயானாவில் கூடுதலாக ஐந்து ஆண்டுகள் பணியாற்றிய பிறகு (மொத்தம் 10 ஆண்டுகளுக்கு), தப்பிப்பிழைத்தவர்கள் இந்தியாவுக்கு திரும்பிச் செல்லவோ அல்லது கயானாவில் தங்கி தங்கள் சொந்த வணிகத்தைத் தொடங்க நிலம் மற்றும் பணத்தை பெறவோ உரிமை உண்டு.[4]: 106–107 

1838 ஆம் ஆண்டில், சுமார் 396 இந்தியர்கள் கொல்கத்தாவிலிருந்து பிரித்தானிய கயானாவுக்கு வந்தனர்.[5] அடுத்த 80 ஆண்டுகளில், மொத்தம் 230,000 க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் இந்தியாவில் இருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.[6]:22

முதல் 25 ஆண்டுகளுக்கு, ஒப்பந்த ஆட்சேர்ப்பு பெரும்பாலும் கொல்கத்தாவிலும் அதைச் சுற்றியுள்ள சிறிய நகரங்களிலிருந்தும், ஆனால் இலங்கை வரை தொலைதூரத்திலிருந்து ஆட்கள் பணியமர்த்தப்பட்டனர்.

வட அமெரிக்காவில் ஒப்பந்த அடிமைத்தனத்தைப் போலவே, அனைத்து ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளின் முதுகெலும்பாக வட இந்தியாவில் "அர்காடிகள்" மற்றும் தென்னிந்தியாவில் "மைத்திரிகள்" என்று அழைக்கப்படும் உள்ளூர் முகவர்கள் உதவினர். கடத்தல் மற்றும் கட்டாயக் காவலில் வைப்பது போன்ற சட்டவிரோத நடைமுறைகளைப் போலவே, அச்சுறுத்தல், வற்புறுத்தல் மற்றும் மோசடி பொதுவானவை. டச்சு காலனியான சுரினாமிற்கு குடிபெயர தொழிலாளர்களை அழைத்து வர அவர்களிடம் அப்பகுதியை ஆட்சேர்ப்பு செய்பவர்கள் "சிறீ-ராம்" என்று உச்சரிப்பார்கள். இது சிக்கலான ஆனால் மிகவும் நேர்மறையான அர்த்தங்களைக் கொண்ட இரண்டு இந்து தெய்வங்களின் பெயர்களாகும்..[4]:105

சுதந்திரமின்மை, கடுமையான வெப்பம் மற்றும் கொடூரமான வேலை நிலைமைகளைச் சமாளிக்க வேண்டியிருந்தது மட்டுமல்லாமல், இந்த ஒப்பந்த ஊழியர்கள் புதிதாக விடுதலையான ஆப்பிரிக்க மக்களிடமிருந்து பெரும்பாலும் விரோதத்தைச் சந்தித்தனர். இந்திய குடியேறியவர்களுக்கு வழங்கப்படும் மிகக் குறைந்த ஊதியத்தால் ஆப்ரிக்கர்களின் வாழ்விற்கான சம்பாதிக்கும் வாய்ப்பு குறைந்தது.[4]:102

பண்பாடு

[தொகு]

இந்தியக் குடியேறிகள் தங்கள் மரபுகளைப் பராமரித்தாலும், சமூகத்தின் கலாச்சாரம் கயானாவிற்கு தனித்துவமானது. இந்திய-கயானிய சமூகம் இந்தியாவின் பல்வேறு பகுதிகள் மற்றும் கலாச்சாரங்களிலிருந்து உருவானது. இதன் விளைவாக, காலப்போக்கில் கயானாவில், அவர்கள் ஒரு தனித்துவமான நவீன இந்திய-கயானிய கலாச்சாரத்தை வளர்த்துள்ளனர்.

கலாச்சாரத் தோற்றம் மற்றும் மதம்

[தொகு]

1838 மற்றும் 1917 க்கு இடையில், 238,909 ஒப்பந்த இந்தியக் குடியேறிகள் உட்பட 500 க்கும் மேற்பட்ட கப்பல் பயணங்களில் கயானாவிற்கு வந்தனர். இவர்களில் சுமார் 75,898 பேர் அல்லது அவர்களது குழந்தைகள் துணைக்கண்டத்திற்குத் திரும்பியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியக் குடியேறிகள் கயானாவில் ஒரு நீடித்த கலாச்சார முத்திரையை பதித்தனர். தங்களின் தொழிலாளர் ஒப்பந்தங்கள் காலாவதியானவுடன், அவர்கள் தங்கள் அசல் தொழில்களை மீண்டும் தொடங்கி, தத்தெடுத்த தாயகத்தில் கிட்டத்தட்ட வழக்கமான பாரம்பரிய இந்திய கிராம வாழ்க்கையை மீண்டும் உருவாக்கினர்.

பண்டிகைகள் மற்றும் விடுமுறை நாட்கள்

[தொகு]
இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் பைரோன் சிங் செகாவத் விட்பி நினைவுச்சின்னத்தைப் பார்வையிடுகிறார்.

இந்திய - கயானிய இந்துக்கள், இந்தியாவில் கொண்டாடப்படும் தீபாவளி, நவராத்திரி நோன்பு, மகா சிவராத்திரி, மகர சங்கராந்தி, துர்க்கை பூஜை மற்றும் இராம நவமி போன்ற அனைத்து இந்து விழாக்களையும், முஸ்லிம்கள் தியாகத் திருநாள், ஈகைத் திருநாள், மீலாதுன் நபி மற்றும் இசுலாமியப் புத்தாண்டு உள்ளிட்ட நாட்களையும், கிறுத்துவர்கள், புத்தாண்டு நாள், நத்தார், உயிர்ப்பு ஞாயிறு, புனித வெள்ளி, திருநீற்றுப் புதன், புனிதர் அனைவர் பெருவிழா மற்றும் கிறித்துவின் திருஉடல், திருஇரத்தம் விழா போன்ற விழாக்களையும் வழக்கமாகக் கொண்டாடி வருகின்றனர். கயானாவில், 1838 ஆம் ஆண்டு மே 5 ஆம் தேதி இந்தியாவிலிருந்து ஒப்பந்த ஊழியர்களாக முதன்முதலில் வந்ததை நினைவுகூரும் வகையில் மே 5 ஆம் தேதி இந்திய வருகை தினம் கொண்டாடப்படுகிறது. அந்த நாளில், கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய தொழிலாளர்கள் கயான வந்தனர்..[7] இவர்கள், கயானாவின் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தேசிய விடுமுறை நாட்களையும் கொண்டாடுகிறார்கள்.

திருமணங்கள்

[தொகு]

இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களிடையே, நவீன காலம் (1960களின் முற்பகுதி) வரை கிராமப்புறங்களில் ஒப்பீட்டளவில் ஆரம்பகால திருமணங்கள் வழக்கமாக இருந்தன; இருப்பினும், இப்போது அவை அரிதாக இருக்கின்றன. நடுத்தர வர்க்க இந்தியர்களுக்கு வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதில் அதிக சுதந்திரம் இருந்தது. பெரும்பாலான பகுதிகளில் மேற்கத்திய உலகைப் போன்ற திருமணம் இப்போது பரவலாக நிகழ்கிறது. மேலும் குடும்ப அலகு கடந்த காலத்தை விட சிறியதாக உள்ளது. இந்திய- கயானா குடும்பங்கள் ஒரு நீட்டிக்கப்பட்ட அமைப்பைக் கொண்ட ஆணாதிக்கமாகத் திகழ்கிறது. ஆனாலும் கயானாவில் உள்ள பல குழுக்களைப் போலவே குடும்ப உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் உதவுகிறார்கள்.[8]

உணவு முறைகள்

[தொகு]

கரீபியனில் கலாச்சாரங்களின் கலவையுடன், இந்திய-கரீபியன் உணவுகள் பெரும்பாலான ஆங்கில கரீபியன் முழுவதும் ஆதிக்கம் செலுத்தும் குறிப்புகளில் ஒன்றாக மாறியது, கறி, ரொட்டி மற்றும் பருப்பு மற்றும் அரிசி போன்ற உணவுகள். இந்தோ-கயானீஸ் சிற்றுண்டிகளில் சால் சேவ் அடங்கும் (தோற்றத்தின் காரணமாக சிக்கன் ஃபுட் என்றும் அழைக்கப்படுகிறது, இருப்பினும் அதில் உண்மையான இறைச்சி இல்லை).[9] கந்தியா,[10] வாழைப்பழ நொறுக்கல்,[11] வறுக்கப்பட்ட தானியங்கள் மற்றும் கொண்டைக் கடலை போன்றவை.[12] Appetizers and street foods include boil and fried or curried channa as well as bara, wrap roti, pholourie, and aloo (potato) or cassava/egg ball which are served with a chutney or sour. The rotis that Indo-Guyanese typically eat are paratha, dhalpuri, sada roti, dosti roti, aloo roti, and puri. Murgatani (Mulligatawny) and இரசம் (உணவு) are popular soups in Guyana of South Indian origin. தோசை is a filled crepe that is eaten by Indo-Guyanese and is of South Indian origin as well.[13]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Indian presence in Guyana". Stabroek News (in அமெரிக்க ஆங்கிலம்). 2009-05-28. Retrieved 2023-07-04.
  2. Roopnarine, Lomarsh (2011). "Indian migration during indentured servitude in British Guiana and Trinidad, 1850–1920". Labor History 52 (2): 173–191. doi:10.1080/0023656X.2011.571473. 
  3. Roopnarine, Lomarsh (2009). "Indian social identity in Guyana, Trinidad, and the North American diaspora". Wadabagei: A Journal of the Caribbean and its Diaspora 12 (3): 87–125. 
  4. 4.0 4.1 4.2 Roopnarine, Lomarsh (2003). "East Indian Indentured Emigration to the Caribbean: Beyond the Push and Pull Model". Caribbean Studies 31 (2): 97–134. 
  5. "Indian Labour in British Guiana - History Today". www.historytoday.com.
  6. Despres, Leo. "Differential Adaptions and Micro-Cultural Evolution in Guyana". Southwestern Journal of Anthropology 25 (1): 14–44. doi:10.1086/soutjanth.25.1.3629466. 
  7. "overseasindian.in". www.overseasindian.in.
  8. "Culture of Guyana - history, people, clothing, women, beliefs, food, customs, family, social". www.everyculture.com.
  9. "Find Out How the Mouthwatering and Moreish Chicken Foot or Sal Sev is Made". 28 November 2018.
  10. "Gantia – Indian Mix | Chief Brand Products". Archived from the original on 22 October 2020. Retrieved 18 October 2020.
  11. "Plantain Chips - Real Nice Guyana". Archived from the original on 18 October 2020.
  12. "Fried Channa - Real Nice Guyana". Archived from the original on 18 October 2020.
  13. "Chota (Guyanese Pancakes/Dosa) with Gluten Free Option". 17 October 2020.

மேலும் படிக்க

[தொகு]
  • Roopnarine, Lomarsh. "Indian social identity in Guyana, Trinidad, and the North American diaspora." Wadabagei: A Journal of the Caribbean and its Diaspora 12.3 (2009): 87+.
  • Sen, Sunanda. "Indentured Labour from India in the Age of Empire." Social Scientist 44.1/2 (2016): 35–74. online[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய-கயானா_மக்கள்&oldid=4197510" இலிருந்து மீள்விக்கப்பட்டது