உள்ளடக்கத்துக்குச் செல்

இலத்தீன் அமெரிக்க ஆய்வுகள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலத்தீன் அமெரிக்க ஆய்வுகள் சங்கம் (Society for Latin American Studies) என்பது ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டதாகும். ஐரோப்பாவின் மிகப்பெரிய இலத்தீன் அமெரிக்க ஆய்வு அறிஞர்களின் அமைப்புகளில் இதுவும் ஒன்றாகும். 1964 ஆம் ஆண்டில் இச்சங்கம் நிறுவப்பட்டது. கல்வி, வணிகம் மற்றும் அரசு சாரா நிறுவனங்களின் அறிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உட்பட 400 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இச்சங்கத்தில் உள்ளனர். இலத்தீன் அமெரிக்க ஆய்வுகள் சங்கம் ஆண்டு மாநாட்டை ஏற்பாடு செய்து, காலாண்டு இதழான புல்லட்டின் ஆஃப் இலத்தீன் அமெரிக்கா என்ற ஆராய்ச்சி இதழை வெளியிடுகிறது.[1] ஆராய்ச்சி மற்றும் தொழில்முறை நடவடிக்கைகளை ஆதரிக்க மானியங்களையும் வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bulletin of Latin American Research Blackwell Publishing, retrieved 8 August 2008

வெளி இணைப்புகள்

[தொகு]