ஐக்கிய மாகாணம்
ஐக்கிய மாகாணம் संयुक्त प्रान्त | |||||
மாகாணம் பிரித்தானிய இந்தியாவின் மாகாணம் (1937–1947) இந்தியா (1947–1950) | |||||
| |||||
தலைநகரம் | அலகாபாத் | ||||
வரலாறு | |||||
• | நிறுவப்பட்டது | 1937 | |||
• | Disestablished | 1950 | |||
தற்காலத்தில் அங்கம் | உத்தரப் பிரதேசம் உத்தரகண்ட் |
ஐக்கிய மாகாணம் (1937–50) (United Provinces-. (UP), பிரித்தானிய இந்தியாவின் வடக்கில் இருந்த மாகாணம் ஆகும். 1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஐக்கிய மாகாணம் 1955 வரை இந்தியாவில் செயல்பட்டது.
வரலாறு
[தொகு]ஆக்ரா மற்றும் அயோத்தி பகுதிகளைக் கொண்டு, ஏப்ரல் 1937ல் ஐக்கிய மாகாணம் பிரித்தானிய இந்தியா அரசால் நிறுவப்பட்டது. ஐக்கிய மாகாணம் தற்கால உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் மாநிலங்களின் பகுதியாக செயல்பட்டது.[1]
மாகாண சுயாட்சி
[தொகு]இந்திய அரசுச் சட்டம், 1935ன் படி, 1937ஆம் ஆண்டில் மாகாண சட்டமன்றங்களுக்கு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க நடந்த தேர்தலில், இந்திய தேசிய காங்கிரசு அதிக தொகுதிகளைக் கைப்பற்றி ஐக்கிய மாகாணத்தில் வெற்றி பெற்றும் அரசு அமைக்க முன்வரவில்லை. இதனால் ஐக்கிய மாகாண ஆளுநர், தேசிய விவசாய கட்சிகளின் தலைவரான சட்டாரி நவாப் முகமது அகமது செய்யது கான் தலமையில் அரசு அமைக்க அழைத்தது. [2]
ஜூலை 1937ல் காங்கிரஸ் கட்சி அரசு அமைக்க சம்மதித்ததால், ஐக்கிய மாகான ஆளுநர் ஹாரி கிரகம் ஹேய்க், கோவிந்த் வல்லப் பந்த் தலைமையிலான அமைச்சரவைக்கு பதவிப் பிரமானம் செய்து வைத்தார். [3][4]
1939ல் அனைத்து மாகாணங்களிலும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவைகள் பதவியை துறந்ததால், மாகாணங்களின் ஆளுநர்களின் ஆட்சி அமலாக்கப்பட்டது. பின்னர் 1946ல் நடைபெற்ற மாகாண சட்டமன்றங்களுக்கு நடைபெற்ற தேர்தல்களில், ஐக்கிய மாகாணத்தில் காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சராக கோவிந்த் வல்லப் பந்த் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திய விடுதலைக்குப் பின்னர்
[தொகு]1947ல் இந்திய விடுதலைக்குப் பின்னர் ஐக்கிய மாகாணத்தில் இருந்த இராம்பூர், காசி, கார்வால் போன்ற சுதேச சமஸ்தானங்கள் இந்தியாவின் ஐக்கிய மாகாணத்துடன் இணைக்கப்பட்டது. 25 சனவரி 1950ல் ஐக்கிய மாகாணத்தின் பெயர் உத்தரப் பிரதேசம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2000ல் உத்தரப் பிரதேசத்தின் வடகிழக்கு பகுதியான உத்தராஞ்சல் பகுதியை உத்தரகண்ட் மாநிலமாக பிரிக்கப்பட்டது.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- The interesting story on how United Province became Uttar Pradesh at Business Standard