உள்ளடக்கத்துக்குச் செல்

கணநாத் ஒபயசேகர

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கணநாத் ஒபயசேகர
பிறப்பு(1930-02-02)2 பெப்ரவரி 1930
மீகாமை, பிரித்தானிய இலங்கை
இறப்பு25 மார்ச்சு 2025(2025-03-25) (அகவை 95)
கொழும்பு, இலங்கை
துறைமானிடவியல்
பணியிடங்கள்பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் (1980–2000)
கல்விபேராதனைப் பல்கலைக்கழகம் (இளங்கலை)
வாஷிங்டன் பல்கலைக்கழகம் (முதுகலை; முனைவர்)

கணநாத் ஒபேயசேகர (Gananath Obeyesekere, 2 பிப்ரவரி 1930 - 25 மார்ச் 2025) என்பவர் பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சமய மானுடவியலாளராகவும், மானிடவியல் பேராசிரியராகவும் இருந்தவராவர். [1] இவரது புத்தகங்களில் இலங்கை கிராமங்களில் நில உடமை முறை: ஒரு சமூகவியல் - வரலாற்று ஆய்வு, மெடுசாவின் தலை முடி, [2] பத்தினி வழிபாட்டு மரபு, [3] உருமாற்றப்பட்ட பௌத்தம் (இணை ஆசிரியர்), பண்பாட்டின் படைப்பு, கேப்டன் குக் கடவுளான கதை, கர்மாவை உருவாக்குதல் ஆகியவை அடங்கும். இவர் தனது களப்பணியின் பெரும்பகுதியை இலங்கையில் மேற்கோண்டார்.

தொழில்

[தொகு]

ஒபேயசேகர பிரித்தானிய இலங்கையின் மீகாமையில் (தற்போதைய இலங்கையின் மேற்கு மாகாணத்தில் உள்ளது) பிறந்தார். இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் இளங்கலைப் பட்டம் (1955) பெற்றார், [4] பின்னர் வாசிங்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டமும் (1958), முனைவர் பட்டதும் (1964) பெற்றார். [5] பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் பணியாற்றுவதற்கு முன்பு, ஒபேயசேகர சிலோன் பல்கலைக்கழகம், [4] வாஷிங்டன் பல்கலைக்கழகம், கலிபோர்னியா பல்கலைக்கழகம், சான் டியாகோ ஆகியவற்றில் கற்பித்தல் பணிகளைச் செய்தார். [6] இவர் 1980 முதல் 2000 ஆம் ஆண்டு ஓய்வு பெறும் வரை பிரின்ஸ்டன் பல்கலைக்கழக மானுடவியல் துறையில் தலைவராகவும், பேராசிரியராகவும் இருந்தார். [7]

ஒபேயசேகரே பல கல்வியியல் விருதுகளைப் பெற்றுள்ளார். இவர் மானுடவியல் துறைக்கு புலமைப் பங்களிப்புகளைப் பாராட்டி ராயல் ஆந்த்ரோபாலஜிக்கல் இன்ஸ்டிடியூட் வழங்கிய தாமஸ் எச். ஹக்ஸ்லி பதக்கமும். [8] 1978 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட கக்கன்ஹெய்ம் பெல்லோஷிப் [9] ஆகியவை அடங்கும். இவர் தனது 95 வயதில் 2025 மார்ச் 25 அன்று கொழும்பில் காலமானார்.

மார்ஷல் சாலின்சுடனான விவாதம்

[தொகு]

1990களில், பழங்குடி மக்களின் பகுத்தறிவு குறித்து மார்ஷல் சாலின்சுடன் ஒபேயேசேகெரே நன்கு அறியப்பட்ட அறிவுசார் விவாதத்தில் ஈடுபட்டார். 1779 ஆம் ஆண்டு அவாயித் தீவுகளில் ஜேம்ஸ் குக் இறந்த விவரங்களை ஆராய்ந்து அது தொடர்பாக இந்த விவாதம் மேற்கொள்ளப்பட்டது. பழங்குடி மக்களின் பகுத்தறிவை எவ்வாறு புரிந்துகொள்வது என்பதுதான் விவாதத்தின் மையப் புள்ளியாக இருந்தது. [10]

புத்தகங்கள்

[தொகு]
  • Land Tenure in Village Ceylon: A Sociological And Historical Study, 1967
  • Medusa's Hair: An Essay On Personal Symbols And Religious Experience, 1981
  • The Cult of the Goddess Pattini, 1984
  • Buddhism Transformed: Religious Change in Sri Lanka (with Richard Gombrich), 1988
  • The Work Of Culture: Symbolic Transformation in Psychoanalysis And Anthropology, 1990
  • The Apotheosis Of Captain Cook: European Mythmaking in the Pacific, 1992
  • Imagining Karma: Ethical Transformation in Amerindian, Buddhist, and Greek Rebirth, 2002
  • Cannibal Talk : The Man-Eating Myth and Human Sacrifice in the South Seas, 2005
  • Karma and Rebirth, 2005
  • The Awakened Ones: Phenomenology of Visionary Experience, 2012
  • The Doomed King: A Requiem For Sri Vikrama Rajasinha, 2017
  • Histories: Sri Lankan Pasts and The Dilemmas of Narrative Representation, 2019
  • The Many Faces of the Kandyan Kingdom: 1591–1765, Lessons for our Time, 2020
  • Placating the Demons: Ritual Practices Among Sri Lankans, 2021
  • Vädda Presence in the Kandyan Kingdom: A Re-Examination, 2022

மற்ற படைப்புகள்

[தொகு]
  • Kataragama: A God For All Seasons, 1973

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Gananath Obeyesekera, Emeritus Professor @ Princeton Anthropology". பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம்.
  2. Obeyesekere, Gananath (15 September 1984). Medusa's Hair. University of Chicago Press. ISBN 0226616010.
  3. Obeyesekere, Gananath (1984). The Cult of the Goddess Pattini. ISBN 0226616029.
  4. 4.0 4.1 "Sinhalese Society Through The Prism Of Religion: An Appreciation Of Gananath Obeyesekere's Work On Sinhalese Buddhism". Colombo Telegraph. 3 July 2023.
  5. "Trobriand Rebirth and the Fate of the Soul: An Old Debate Revisited | Berkeley Graduate Lectures". gradlectures.berkeley.edu.
  6. https://library.ucsd.edu/dc/object/bb6383578q/_2.pdf. {{cite web}}: Missing or empty |title= (help)
  7. "Gananath Obeyesekere". www.csds.in.
  8. Huxley Memorial Medal and Lecture Prior Recipients - Royal Anthropological Institute. 6 November 2008.
  9. "Gananath Obeyesekere – John Simon Guggenheim Memorial Foundation…" (in ஆங்கிலம்).
  10. Moore, Jerry D. 2009. "Marshall Sahlins: Culture Matters" in Moore, J.D. (2004). Visions of Culture: An Introduction to Anthropological Theories and Theorists. G – Reference, Information and Interdisciplinary Subjects Series. AltaMira Press. pp. 365–85. ISBN 978-0-7591-0411-2. Retrieved 2023-08-22.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கணநாத்_ஒபயசேகர&oldid=4259359" இலிருந்து மீள்விக்கப்பட்டது