காத்திருந்த கண்கள்
| காத்திருந்த கண்கள் | |
|---|---|
| இயக்கம் | டி. பிரகாஷ் ராவ் |
| தயாரிப்பு | டி. கே. ராமசாமி வாசுமதி பிக்சர்ஸ் |
| இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
| நடிப்பு | ஜெமினி கணேசன் சாவித்திரி வி. எஸ். ராகவன் |
| படத்தொகுப்பு | என். எம். சங்கர் |
| வெளியீடு | ஆகத்து 29, 1962 |
| ஓட்டம் | . |
| நீளம் | 4004 அடி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
காத்திருந்த கண்கள் (Kathiruntha Kangal) என்பது 1962ஆம் ஆண்டு டி. பிரகாஷ் ராவ் இயத்திய தமிழ்த் திரைப்படம். இதில் ஜெமினி கணேசன், சாவித்திரி எம். ஆர். ராதா, எஸ். வி. ரங்கா ராவ், வி. எஸ். ராகவன், பண்டரி பாய் ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருந்தனர். இதில் சாவித்திரி இரட்டடை வேடத்தில் நடத்தார். இது 1960 ஆம் ஆண்டு வெளியான வங்கத் திரைப்படமான ஸ்மிருதி டுக்கு தக் என்ற படத்தின் மறுஆக்கம் ஆகும், அது மலாபிகா ராய் எழுதிய அதே பெயரிலான வங்க நாடகத்தைத் தழுவி எடுக்கப்பட்டதாகும்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் ஆஷா ஜோதி என்ற பெயரில் வெளியானது. எம். எஸ். சோலைமலை கதை எழுதினார். பாடல்களை கண்ணதாசன் எழுதினார். விஸ்வநாதன், ராமமூர்த்தி ஆகியோர் இசை அமைத்திருந்தனர்.[2]
நடிப்பு
[தொகு]- இரட்டை சகோதரிகளான செண்பகம், லலிதாவாக - சாவித்திரி
- மருத்துவர் கிருஷ்ணனாக - ஜெமினி கணேசன்
- இரட்டை சகோதரிகளின் தாய் - லட்சுமி
- செல்வந்தர் பஞ்சநாத முதலியாராக - எஸ். வி. ரங்கராவ்
- தணிகாச்சலமாக - எம். ஆர். ராதா
- பாலாஜியின் சகோதரியாக பண்டரிபாய்
- திலகமாக சந்தியா
- காமாட்சியாக எஸ். என். லட்சுமி
- மருத்துவர் நாயராக ராகவன்
- பி. டி. சம்பந்தம்
- உலகளந்தானாக கரிகோல் ராஜு
- மருத்துவராக பாலாஜி
- சுந்தரமாக கோபாலகிருட்டிணன்
திரைக்கதை
[தொகு]பிறந்த உடனேயே வறுமையின் காரணமாக சகோதரிகள் இருவரும் பிரிய நேர்கிறது. ஒரு பெண்ணை வறுமையில் வாடும் தாயும் இன்னொருத்தியை செல்வந்தரும் வளர்க்கின்றனர். மருத்துவர் அந்த நோய்வாய்ப்பட்ட தாய்க்கு மருத்துவம் செய்கிறார். அவர் மீது காதல் கொள்கிறாள் தாயுடன் வளர்க்கப்பட்ட பெண். இதை அவர் அறிந்திருக்கவில்லை. இறக்கும் தறுவாயில், தன் மகளிடம் அவள் இரட்டையரில் ஒருத்தி என்ற உண்மையை சொல்கிறாள் தாய். தன் சகோதரியைத் தேடிச் செல்கிறாள் அந்தப் பெண். அதிர்ஷ்டவசமாக, சகோதரிகள் இருவரும் ஒரே ரயிலில் பயணிக்கிறார்கள். ரயில் விபத்தில் செல்வந்தருடன் வளர்ந்த மகள் நினைவிழக்கிறாள். அவள் இறந்து விட்டதாக அனைவரும் நம்புகின்றனர். அவள் பயணித்த ரயிலில் சென்ற தாயுடன் வளர்க்கப்பட்ட பெண்ணையே பணக்காரப் பெண் என்று நினைத்து மணக்கிறார் மருத்துவர். இருவருக்கும் குழந்தை பிறக்கிறது. பணக்கார சகோதரி திரும்புகிறாள். சிக்கல்கள் எப்படித் தீர்ந்தன என்பது மீதிக்கதை.
பாடல்கள்
[தொகு]இப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைக்க, பாடல் வரிகளை கண்ணதாசன் இயற்றினார்.
| பாடல்கள் | ||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
| 1. | "காற்று வந்தால் தலைசாயும் நாணல்" | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா | ||||||||
| 2. | "கண்படுமே பிறர் கண்படுமே நீ வெளியே வரலாமா" | பி. பி. ஸ்ரீனிவாஸ் | ||||||||
| 3. | "ஓடம் நதியினிலே" | சீர்காழி கோவிந்தராஜன் | ||||||||
| 4. | "துள்ளித் திரிந்த பெண்ணொன்று" | பி. பி. ஸ்ரீனிவாஸ் | ||||||||
| 5. | "வா என்றது உருவம்" | பி. சுசீலா | ||||||||
| 6. | "வளர்ந்த கலை மறந்துவிட்டாள் கேளடா கண்ணா" | பி. பி. ஸ்ரீனிவாஸ், பி. சுசீலா | ||||||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "சினிமாஸ்கோப் 36: அபூர்வ சகோதரிகள்". Hindu Tamil Thisai. 2017-06-09. Retrieved 2025-01-13.
- ↑ ராண்டார் கை (27 ஏப்ரல் 2013). "Kaathirundha Kangal (1962)". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/cinema-columns/kaathirundha-kangal-1962/article4660395.ece. பார்த்த நாள்: 28 அக்டோபர் 2016.