உள்ளடக்கத்துக்குச் செல்

காரைக்குடி மாநகராட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காரைக்குடி மாநகராட்சி
Devakottai Road Entrance Arch
காரைக்குடி மாநகராட்சி பகுதி
வகை
வகை
வரலாறு
தோற்றுவிப்புமார்ச்சு 15, 2024; 15 மாதங்கள் முன்னர் (2024-03-15)
தலைமை
எசு. முத்துதுரை
மாநகரத் துணைத்தந்தை
என். குணசேகரன்
எசு. சித்ரா
கூடும் இடம்
காரைக்குடி மாநகராட்சி அலுவலகம்
வலைத்தளம்
https://karaikudilpa.com

காரைக்குடி மாநகராட்சி மார்ச் 15 2024 அன்று காரைக்குடி நகராட்சியிலிருந்து தரம் உயர்த்தப்பட்டதற்கான ஆணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. [1]காரைக்குடி நகராட்சியானது 2013ம் ஆண்டு முதல் சிறப்பு நிலை பெரு நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பில் காரைக்குடியில் 2022 நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 234523 உள்ளது [2]. 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை மூன்று லட்சத்துதிற்கு மேல் உள்ளது. 100 வார்டுகளுடன் செயல்பட்டு வரும் மாநகராட்சியின் ஆண்டு வருமானம் ரூ. 57.05 கோடியாகும்.

புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள்

[தொகு]

காரைக்குடி மாநகராட்சியுடன் கீழ்கண்ட பகுதிகள் இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது.

பேரூராட்சிகள்

[தொகு]
  1. கானாடுகாத்தான் பேரூராட்சி
  2. கோட்டையூர் பேரூராட்சி
  3. கண்டனூர் பேரூராட்சி

ஊராட்சிகள்

[தொகு]
  1. அரியக்குடி ஊராட்சி
  2. இலுப்பக்குடி ஊராட்சி
  3. சங்கராபுரம்
  4. மானகிரி ஊராட்சி
  5. கோவிலூர் ஊராட்சி (சிவகங்கை)

இதன் மூலம் காரைக்குடி மாநகராட்சி 2.56 லட்சம் மக்கள் தொகையும் 96 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டதாக விரிவடைகிறது. மாநகராட்சியின் மொத்த வருவாய் ரூபாய் 57.5 கோடியாக உயரும் என கணக்கிடப்பட்டுள்ளது.[3]

காரைக்குடி மாநகராட்சியை இயக்கும் காரணிகள்

[தொகு]
  • மக்கள் தொகை வளர்ச்சி.
  • சராசரி ஆண்டு வருமான அதிகரிப்பு.
  • சாலைகளை மேம்படுத்துதல்.
  • குடிநீர் வழங்குதல்.
  • நிலப்பரப்பை மேம்படுத்துதல்.
  • கழிவு மேலாண்மை.
  • தொழில்துறை அமைப்புகளை நிறுவுதல்.
  • கழிவுநீர் இணைப்பு வழங்குதல்.

மேற்கோள்கள்

[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=காரைக்குடி_மாநகராட்சி&oldid=4307178" இலிருந்து மீள்விக்கப்பட்டது