கியான்யார் பிராந்தியம்
கியான்யார் பிராந்தியம்
Gianyar Regency Kabupaten Gianyar ᬓᬩᬸᬧᬢᬾᬦ᭄ᬕᬜᬃ | |
---|---|
![]() கியான்யார் பிராந்தியம் | |
ஆள்கூறுகள்: 8°32′38″S 115°19′31″E / 8.54389°S 115.32528°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
தலைநகரம் | கியான்யார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 368 km2 (142 sq mi) |
மக்கள்தொகை (2024)[1] | |
• மொத்தம் | 5,07,746 |
• அடர்த்தி | 1,400/km2 (3,600/sq mi) |
வழிபாடு | |
• சமயம் |
|
• HDI (2023) | 79,69 (high) |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +8 |
அஞ்சல் குறியீடு | +62 361 |
தொலைபேசி | (+62) 362 |
வாகனப் பதிவெண்கள் | DK |
இணையதளம் | gianyarkab |
கியான்யார் பிராந்தியம் (ஆங்கிலம்: Gianyar Regency; பாலினியம்: Kabupatén Gyañaŕ; இந்தோனேசியம்: Kabupaten Gianyar) என்பது இந்தோனேசியா, பாலி தீவில் ஒரு பிராந்தியம் ஆகும். இந்தப் பிராந்தியத்தின் தலைநகரம் கியான்யார் (Gianyar).
பாலி தீவின் மையப் பகுதியில் அமைந்துள்ள கியான்யார் பிராந்தியம் 368.0 கிமீ2 பரப்பளவைக் கொண்டுள்ளது; மற்றும் 2024-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 507,746 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது.[2] இது பாலியில் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது. பாலி தீவின் கலை மற்றும் சுற்றுலா துறையின் மையமாக விளங்கும் உபுட் நகரம், கியான்யார் பிராந்தியத்தில்தான் உள்ளது.
கியான்யார் பிராந்தியம் அதன் ஆழமான பண்பாட்டு மரபுகளுக்குப் பெயர் பெற்றது. ஆனைக் குகை, தீர்த்த எம்புல் கோயில், குனோங் காவி கோயில் (Gunung Kawi); மற்றும் பல முக்கியமான கோயில்கள், வரலாற்றுத் தளங்கள் போன்றவை இந்தப் பிராந்தியத்தில் உள்ளன. இந்தக் கோயில்களின் மத அமைப்பில் மட்டுமல்ல, கட்டிடக்கலைக் கூறுகளிலும் குறிப்பிடத்தக்கவை.[3]
பொது
[தொகு]இந்தப் பிராந்தியம், பாரம்பரிய பாலினிய கலைகள் மற்றும் கைவினைகளுக்கான மையமாகும். மரச் செதுக்குதல், கல் செதுக்குதல் மற்றும் வெள்ளி நகைகள் தயாரித்தல் போன்றவற்றுக்கு பிரபலமானது. பாலியின் பண்பாட்டு மையமாகவும்; பிரபலமான சுற்றுலா தலமாகவும் இருக்கும் உபுட் நகரம், கியான்யார் பிராந்தியத்துடன் நெருங்கிய தொடர்புடையது. உபுட் அதன் கலைக் காட்சி, பாரம்பரிய நடனங்கள் மற்றும் மலை அடுக்கு நெல் வயல்களுக்குப் பிரபலமானது. உபுட் குரங்கு காடு (Ubud Monkey Forest); இந்தப் பகுதியில் உள்ள மற்றொரு பிரபலமான ஈர்ப்பாகும்.
வரலாறு
[தொகு]கியான்யார் பிராந்தியத்தின் வரலாறு, பாலியின் வரலாற்றுடன் நெருக்கமாகப் பிணைந்துள்ளது. ஏனெனில் பாலி தீவின் பிராந்தியங்களில் ஒன்றாகும். பாலியின் வரலாறு பண்டைய காலங்களுக்கு முந்தையது; மேலும் இது இந்திய, சீன மற்றும் ஜாவானிய கலாசாரங்களால் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அவை தனித்துவமான பாலினிய பண்பாட்டிற்குப் பங்களித்துள்ளன.[4]
கியான்யாரின் குறிப்பிடத்தக்க வரலாற்றுக் கூறுகளில் ஒன்று கெல்கெல் இராச்சியத்துடனான அதன் தொடர்பு ஆகும். 16-ஆம் நூற்றாண்டில், கெல்கெல் இராச்சியம், பாலியில் பல இராச்சியங்களை ஒன்றிணைத்த ஒரு சக்திவாய்ந்த இராச்சியமாக உருவெடுத்தது. இந்த இராச்சியத்தின் செல்வாக்கு கியான்யார் பிராந்தியம் வரை பரவியது.[4] மேலும் அந்த கெல்கெல் இராச்சியத்தின் தலைநகரம் [கியான்யார் பிராந்தியம்|கியான்யார்]] நகரத்திற்கு அருகிலேயே அமைந்திருந்தது.
கெல்கெல் இராச்சியம்
[தொகு]
இந்தக் காலகட்டத்தில்தான் இப்பகுதியில் பல கோயில்களும் பண்பாட்டு அடையாளங்களும் உருவாக்கப்பட்டன. 19-ஆம் நூற்றாண்டில், கெல்கெல் இராச்சியம் வீழ்ச்சியடைந்தது. அதன் அதிகாரத்தை குலுங்குங் இராச்சியம் மாற்றியது. குலுங்குங் இராச்சியம் [கியான்யார் பிராந்தியம்|கியான்யார்]] மீது தொடர்ந்து செல்வாக்கைச் செலுத்தியது. மேலும் அந்த இராச்சியம் அதன் வளமான பண்பாடு மற்றும் கலை பாரம்பரியத்திற்காக அறியப்பட்டது.[5]
பாலியின் குடியேற்றவியக் காலத்தில், இடச்சு கிழக்கிந்திய நிறுவனம் (VOC) பாலிக்கு வந்து அந்தத் தீவின் மீது நிறுவனத்தின் கட்டுப்பாட்டை நிலைநாட்ட முயன்றது. பாலி மக்கள் இடச்சு குடியேற்றவியத்தைக் கடுமையாக எதிர்த்தனர். மேலும் [கியான்யார் பிராந்தியம்|கியான்யார்]] உட்பட பாலி தீவின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியான போர்கள் நடந்தன. பாலி மக்கள், இடச்சுப் படைகளுக்கு எதிராக குறிப்பிடத்தக்க எதிர்ப்பைக் காட்டினர். இதனால் தீவைக் கைப்பற்றுவது என்பது கடினமான மற்றும் நீடித்த செயல்முறையாக மாறியது.[5]
1945-ஆம் ஆண்டு இந்தோனேசியா விடுதலை பெற்ற பிறகு, கியான்யார் பிராந்தியம் இந்தோனேசியா குடியரசின் ஒரு பகுதியாக மாறியது; மற்றும் பாலி மாநிலத்திற்குள் உள்ள பிராந்தியங்களில் ஒன்றாக இணைக்கப்பட்டது.[5]
நிர்வாக மாவட்டங்கள்
[தொகு]கியான்யார் பிராந்தியம் 7 மாவட்டங்களாக (Districts of Indonesia) (Kecamatan) பிரிக்கப்பட்டுள்ளது.
நிர்வாக குறியீடு |
மாவட்டம் (Kecamatan) |
பரப்பு கிமீ 2 |
மக்கள் தொகை 2010 |
மக்கள் தொகை 2020 |
மக்கள் தொகை 2022 |
கிராமம் | அஞ்சல் குறியீடு |
---|---|---|---|---|---|---|---|
51.04.01 | சுகவதி | 55.02 | 110,429 | 119,975 | 121,700 | 12 | 80582 |
51.04.02 | பிலாபத்து | 39.70 | 65,875 | 74,093 | 75,700 | 9 | 80581 |
51.04.03 | கியான்யார் (நகரம்) | 50.59 | 86,843 | 101,444 | 104,400 | 17 | 80511 - 90515 |
51.04.04 | தம்பாக்சிரிங் | 42.63 | 45,818 | 50,864 | 51,800 | 8 | 80552 |
51.04.05 | உபுட் மாவட்டம் | 42.38 | 69,323 | 71,568 | 71,900 | 8 | 80571 |
51.04.06 | தெகாலாலாங் | 61.80 | 50,325 | 52,257 | 52,600 | 7 | 80561 |
51.04.07 | பாயாங்கான் | 75.88 | 41,164 | 45,143 | 45,900 | 9 | 80572 |
மொத்தம் | 368.00 | 469,777 | 515,344 | 523,972 | 70 |
- புலெலெங் பிராந்தியம்
-
பாலி தீவில் கியான்யார் பிராந்தியம்
-
கியான்யார் பிராந்தியத்தின் மாவட்டங்கள்
காலநிலை
[தொகு]கியான்யார் பிராந்தியம் வெப்பமண்டல மழைக்காடு காலநிலை (Af) கொண்டது. ஆண்டு முழுவதும் மிதமான மழைப்பொழிவு முதல் கனமழை வரை இருக்கும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், கியான்யார் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 30.3 (86.5) |
30.5 (86.9) |
30.6 (87.1) |
31.1 (88) |
30.8 (87.4) |
30.0 (86) |
29.3 (84.7) |
29.6 (85.3) |
30.3 (86.5) |
31.0 (87.8) |
31.1 (88) |
30.7 (87.3) |
30.44 (86.8) |
தினசரி சராசரி °C (°F) | 26.4 (79.5) |
26.5 (79.7) |
26.4 (79.5) |
26.4 (79.5) |
26.1 (79) |
25.2 (77.4) |
24.8 (76.6) |
25.0 (77) |
25.7 (78.3) |
26.4 (79.5) |
26.6 (79.9) |
26.5 (79.7) |
26 (78.8) |
தாழ் சராசரி °C (°F) | 22.5 (72.5) |
22.5 (72.5) |
22.2 (72) |
21.7 (71.1) |
21.4 (70.5) |
20.5 (68.9) |
20.4 (68.7) |
20.5 (68.9) |
21.1 (70) |
21.8 (71.2) |
22.2 (72) |
22.3 (72.1) |
21.59 (70.87) |
மழைப்பொழிவுmm (inches) | 276 (10.87) |
265 (10.43) |
172 (6.77) |
84 (3.31) |
114 (4.49) |
134 (5.28) |
186 (7.32) |
95 (3.74) |
112 (4.41) |
152 (5.98) |
164 (6.46) |
251 (9.88) |
2,005 (78.94) |
ஆதாரம்: Climate-Data.org[6] |
காட்சியகம்
[தொகு]- கியான்யார் பிராந்திய காட்சிப் படங்கள்
-
கியான்யார் நகரத்தில்
-
கியான்யார் சந்தை நுழைவாயில்
-
கியான்யார் மீலா அஸ்தி சடங்கு
-
சிங்கராஜாவில் ஒரு திருவிழா (2008)
-
கெதேவதா கோயில்
-
நாம்யோக் நடனம்
-
சாயான் கோயில்
-
தீர்த்த வழிபாடு
பொதுவகத்தில் கியான்யார் பிராந்தியம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Visualisasi Data Kependudukan Kementerian Dalam Negeri - Dukcapil 2024" (Visual). gis.dukcapil.kemendagri.go.id. Retrieved 22 August 2024.
- ↑ Biro Pusat Statistik, Jakarta, 2011.
- ↑ properties, balicasa. "Gianyar is renowned for its deep-rooted cultural traditions. The regency is home to many important temples and historical sites, including Goa Gajah (Elephant Cave), Tirta Empul Temple, Gunung Kawi Temple, and more". Balicasa Properties (in english). Retrieved 6 March 2025.
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 4.0 4.1 "Gianyar Regency - In the 16th century, the Gelgel Kingdom emerged as a powerful state that unified several principalities in Bali". Bali Travel - Day Tours | Bali Tourist Destinations - Bali Glory (in ஆங்கிலம்). Retrieved 7 March 2025.
- ↑ 5.0 5.1 5.2 "Gianyar Regency, Bali, Indonesia: Traditional and Historical Architecture". Asian Architecture (in ஆங்கிலம்). Retrieved 7 March 2025.
- ↑ "Climate: Gianyar". Climate-Data.org. Retrieved 17 November 2020.
மேலும் படிக்க
[தொகு]- Vickers, Adrian (1995), Gianyar Regency. taken from Oey, Eric, ed. (1995). Bali. Singapore: Periplus Editions. p. 115. ISBN 962-593-028-0.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் கியான்யார் பிராந்தியம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: Central Bali
- அதிகாரப்பூர்வ இணையதளம்