உள்ளடக்கத்துக்குச் செல்

க. திருநாவுக்கரசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

க. திருநாவுக்கரசு என்பவர் ஒரு தமிழக எழுத்தாளர். இவர் தொடருந்துப் பாதுகாப்புப் படையில் சேர்ந்து இந்திய - சீனப் போரின் போது எல்லைப் பகுதியில் பணியாற்றியவர். சொந்த அச்சகம் ஒன்றை நிறுவி நக்கீரன், நம்நாடு பேசுகிறது போன்ற இதழ்களை சொந்தமாக நடத்திய இவர் ஈழப் பிரச்சனைகளுக்காகப் பல முறை சிறை சென்றிருக்கிறார். முரசொலி நாளேட்டின் செய்தி ஆசிரியராகவும், கட்டுரை ஆசிரியராகவும் பணியாற்றியவர். தமிழ்நாடு அரசின் திரு. வி. க. விருது , ஆழ்வார்கள் மையத்தின் தமிழறிஞர் விருது போன்றவைகளைப் பெற்றிருக்கிறார். இவர் எழுதிய "நீதிக்கட்சி வரலாறு" [1] எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2009 ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல்களில் நாட்டு வரலாறு வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது.

கலைமாமணி விருது

[தொகு]

தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையால் வழங்கப்பட்டு வரும் கலைமாமணி விருதுக்கு, இயல் பிரிவில் 2021 ஆண்டுக்கு இவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். [2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-04-30. Retrieved 2014-10-12.
  2. 2021, 2022, 20236 ஆண்டுக்கான கலைமாமணி விருதுகளை அறிவித்தது தமிழ்நாடு அரசு
"https://ta.wikipedia.org/w/index.php?title=க._திருநாவுக்கரசு&oldid=4348498" இலிருந்து மீள்விக்கப்பட்டது