சமந்தபஞ்சகம்
சமந்தபஞ்சகம் (Samantapañcaka) (சமசுகிருதம்:समन्तपञ्चक).— மகாபாரதம் இதனை ஐந்து ஏரிகள் என்று குறிப்பிடுகிறது. இந்த ஏரிகளை பரசுராமர் சத்திரியர்களின் 21 தலைமுறையினரைக் கொன்று அவர்களது குருதியால் சமந்தபஞ்சகம் எனும் ஐந்து ஏரிகளை உருவாக்கினார்[1]. மகாபாரத காலத்தில் சமந்தபஞ்சகத்தை குருச்சேத்திரம் என்று அழைக்கப்பட்டது.
இவ்விடத்தில் பாண்டவப் படைகளுக்கும், கௌரவப் படைகளுக்கும் 18 நாள் குருச்சேத்திரப் போர் நடைபெற்றது.18ஆம் நாள் போரில் தோவியுற்ற கௌரவப் படைத் தலவைர் துரியோதனன் சமந்தபஞ்சகம் ஏரியில் ஒழிந்து கொண்டார்.[2]இதனை அறிந்த பாண்டவர்கள், கிருஷ்ணன் தலைமையில் ஒன்று கூடி சமந்தபஞ்சகம் ஏரியை அடைந்தனர். ஏரியிலிருந்து வெளிப்பட்ட துரியோதனனை பீமன் தன் கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து கொன்றார்.
தொன்ம வரலாறு
[தொகு]ஜமதக்கினி முனிவர் ரேணுகாவை மணந்தார். இத்தம்பதியரின் ஐந்து மகன்களில் ஐந்தாமவர் பரசுராமர் ஆவார். ஒரு முறை மாமன்னர் கார்த்தவீரிய அருச்சுனன், பரசுராமர் இல்லாத நேரத்தில் ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்குச் சென்று, ஆணவத்தால் முனிவரை அவமரியாதை செய்தார். கார்த்தவீரிய அருச்சனின் வீரர்கள், முனிவரின் முழு குடும்பத்திற்கும் உணவளித்த பசுக்களை வலுக்கட்டாயமாக கடத்த முயன்றதுடன், ஆசிரமத்தை இடித்தனர். மேலும் கார்த்தவீரிய அருச்சுனனின் மகன்கள் முனிவர் ஜமதக்கினியை கொன்றனர். பின்னர் இதனை அறிந்த பரசுராமர் கோபம் கொண்டு, கார்த்தவீரிய அருச்சுனனின் ஆயிரம் கைகளை தனது கோடாரியால் வெட்டிக் கொன்றார். கோபம் தனியாத பரசுராமர் 21 தலைமுறை சத்திரிய மன்னர்களைக் கொன்றார்.
பரசுராமர் தனது தந்தையின் நினைவாக சமந்தபஞ்சகம் எனும் ஐந்து இரத்த ஏரிகளையும், வழிபாட்டிற்காக ஒரு பலிபீடத்தையும் நிறுவினார். பின் பரசுராமர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவதற்கு, சமந்தபஞ்ச ஏரியின் குருதி நீரை வார்த்தார். முனிவர் ஜமதக்கினி உள்ளிட்ட பித்ருக்கள் பரசுராமர் முன் தோன்றி வேண்டிய வரத்தை கேள் என்று கூறினார்கள். பரசுராமர் தன் 21 தலைமுறை சத்திரியர்களை கொன்ற பாவம் தீர வரம் வழங்க வேண்டினார். பித்ருக்களும் பரசுராமர் கேட்ட வரம் வழங்கியதுடன், சத்திரியர்களின் குருதியால் நிரப்பப்பட்ட சமந்தபஞ்ச ஏரிகளின் நீர் புனித நீராக மாறியது.[3][4]
சிறப்பு
[தொகு]முழு சூரிய கிரகணத்தின் போது சமந்தபஞ்சகம் ஏரியில் துறவிகள் மற்றும் முனிவர்கள் புனித நீராடும் குளமாக மாறியது. தற்போது சமந்தபஞ்சகம் ஏரியை பிரம்மசரோவர் குளம் என்பர்.