உள்ளடக்கத்துக்குச் செல்

சீக்கிய சமயத்தின் ஐந்து சிம்மாசனங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியாவில் சீக்கிய சமயத்தின் ஐந்து சிம்மாசனங்களின் அமைவிடம்

சீக்கியத்தின் ஐந்து சிம்மாசனங்கள் அல்லது தக்த் அல்லது தக்த்கல் (takht)[1] சீக்கிய சமயத்தின் ஆன்மீக மையம் ஆகும்.[2] இந்த ஐந்து சிம்மாசனங்களில் குருத்துவார்கள் அமைந்துள்ளது. இந்த ஐந்து சிம்மாசனங்களில் மூன்று பஞ்சாபிலும், ஒன்று பாட்னாவிலும், மற்றொன்று மகாராஷ்டிரா மாநிலத்தின் நான்தேட் நகரத்திலும் அமைந்துள்ளது.[3]

முதல் சிம்மாசனத்தை குரு கோவிந்த் சிங் என்பவர் அமிர்தசரஸ் நகரத்தில் உள்ள பொற்கோயில் எனப்படும் ஹர்மந்திர் சாகிப் குருத்துவார் வளாகத்தில் 1609ஆம் ஆண்டில் அகால் தக்த் நிறுவினார். இதுவே சீக்கிய சமயத்தின் தலைமை அதிகாரம் மிக்க சிம்மாசனம் மற்றும் கால்சாவின் தலைமையிடம் ஆகும். இவ்விடத்தில் சீக்கிய தலைமை குரு சீக்கியத்தின் கொள்கை முடிவு, வழக்குகள் மீதான தீர்ப்புகள் மற்றும் இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான முடிவுகள் அறிவிப்பார்.[4]

பிற நான்கு சிம்மாசனங்கள்

[தொகு]
  1. அனந்தபூர் சாகிப் குருத்துவார் - அனந்த்பூர் சாஹிப், ரூப்நகர் மாவட்டம், பஞ்சாப்
  2. தம்தமா சாகிபு - பட்டிண்டா மாவட்டம், பஞ்சாப்
  3. ஹசூர் சாகிப் குருத்துவார், நான்தேட், மகாராட்டிரம்
  4. பாட்னா சாகிப் குருத்துவார் - பாட்னா, பீகார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "New Persian-English Dictionary". dsal.uchicago.edu. Chicago University. Archived from the original on 1 September 2023. Retrieved 1 September 2023.
  2. Dogra, R. C.; Mansukhani, Gobind Singh (1995). Encyclopaedia of Sikh Religion and Culture. Vikas Publishing House. pp. 356. ISBN 9780706983685.
  3. Chandra, Aditi; Chandra, Vinita (2019). The Nation and Its Margins: Rethinking Community. Cambridge Scholars Publishing. p. 80. ISBN 9781527544574.
  4. Singh, Khushwant (2004-11-18), "Constitutional Reforms and the Sikhs", A History of the Sikhs, Oxford University Press, pp. 216–234, retrieved 2024-03-31