தொடர் நிகழ்காலம்
தொடர் நிகழ்காலம் (present continuous) என்பது நவீன ஆங்கிலத்தில் பயன்படுத்தப்படும் ஒரு வினை வடிவமாகும், இது நிகழ்காலத்தில் தொடர்ச்சியாக நடந்துகொண்டேயிருக்கும் செயல்களைக் குறிப்பதாகும்.[1] நாம் பேசும் சமயத்தில் தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் செயல்களையோ சிறிது காலம் மட்டுமே நீடிக்கும் செயல்களையோ சிறிதுகாலம் மட்டும் நீடிக்கும் அடிக்கடி நடக்கும் செயல்களையோ படிப்படியாக மாற்றமடையும் நிகழ்வுகளைக் குறிக்க இந்தக் காலம் பயன்படுகிறது.[2] இது பேசப்படும் ஆங்கிலத்தில் சுமார் 5% வினைச்சொற்களைக் கொண்டுள்ளது.[3]
உருவாக்கம்
[தொகு]தொடர் நிகழ்காலமானது பரவலாக வினைச் சொற்களின் அடிப்படை வடிவத்துடன் -ing எனும் பின்னொட்டினைச் சேர்ப்பதன் மூலம் உருவாகிறது [4][5]
எடுத்துக்காட்டாக, வினைச்சொல்லுக்கு -ing எனும் பின்னொட்டு சேர்ப்பதன் மூலமும், தற்போதைய நிகழ்கால வினைச் சொற்களுடன் be வினை வடிவங்களான (am, are, is, was, were) ஐ அதற்கு முன்னால் சேர்ப்பதன் மூலமும் வினைச்சொல் தொடர் நிகழ்காலத்தினைப் பயன்படுத்த இயலும். [6]
- நான் வேலை செய்துகொண்டிருக்கிறேன்.(I am working.)
- நீங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறீர்கள்(You are working). .
- அவள் வேலை செய்து கொண்டிருக்கிறாள் (She is working).
- நாங்கள் வேலை செய்துகொண்டிருக்கிறோம் (We are working).
- அவர்கள் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் (They are working).
பயன்பாடுகள்
[தொகு]பெரும்பான்மையாக நாம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் நிகழும் செயல்களைக் குறிப்பிட தொடர் நிகழ்காலம் பயன்படுகிறது. [6]
- அந்தப் பையன் சிரித்துக் கொண்டிருக்கிறான்.
நிகழ்காலமானது பழக்கவழக்கங்கள், மாறாத சூழ்நிலைகள், பொதுவான உண்மைகள் மற்றும் நிலையான ஏற்பாடுகள் ஆகியவற்றின்போது பயனபடுகிறது.[7][8]
ஆனால் தொடர் நிகழ்காலமானது, நாம் பேசிக் கொண்டிருக்கும் சமயத்தில் நிகழாமல் இருந்தாலும் ஒரு தற்காலிகச் செயல்பாட்டை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.[9]
- They are working in Dubai (அவர்கள் துபாயில் வேலை பார்க்கிறார்கள்)
- I am writing a book (நான் ஒரு புத்தகம் எழுதுகிறேன்).
- I am living in Scotland until the end of the year. (நான் இந்த ஆண்டு இறுதி வரை ஸ்காட்லாந்தில் வசித்து வருகிறேன்)
மேற்கானும் எடுத்துக்காட்டுகள் மூலம் நிலையான செயல்பாடுகள் நிகழ்காலத்தில் மட்டும் பயன்படுத்தப்படுவது தெளிவாகிறது. ஏனெனில் மேற்கானும் எடுத்துக்காட்டுகள் அனைத்தும் தற்காலிகமான செயல்களே.[10]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Tense vs aspect | Collins ELT". news.collinselt.com (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2018-08-24.
- ↑ "present-continuous". dictionary.cambridge.org. December 2, 2024. Retrieved December 2, 2024.
- ↑ "Most Common English Verb Tenses | Ginseng English | Learn English". Ginseng English (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-04.
- ↑ "Present continuous" (in en). LearnEnglish (British Council). https://learnenglish.britishcouncil.org/english-grammar/present-continuous.
- ↑ "Present Continuous". Present Continuous (in ஆங்கிலம்). 2015-10-30. Retrieved 2022-01-04.
- ↑ 6.0 6.1 "Present continuous" (in en). LearnEnglish (British Council). https://learnenglish.britishcouncil.org/english-grammar/present-continuous."Present continuous". LearnEnglish. British Council. Retrieved 2019-03-04.
- ↑ "Present Simple and Present Continuous | Learn English". www.ecenglish.com. Retrieved 2022-01-04.
- ↑ "Simple present tense | EF | Global Site". www.ef.com (in ஆங்கிலம்). Retrieved 2022-01-04.
- ↑ "The present continuous tense - Easy Learning Grammar". Collins Dictionary. Retrieved 2019-03-05.
- ↑ "Present simple". LearnEnglish (in ஆங்கிலம்). 2010-03-19. Retrieved 2022-01-04.