உள்ளடக்கத்துக்குச் செல்

நஞ்சேற்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஞ்சேற்றம்
ஒத்தசொற்கள்விஷக்கடி, பாம்புக்கடி,தேள்கடி
சிறப்புநச்சியல்

நஞ்சேற்றம் (envenomation) என்பது நச்சு விலங்குகளின் கடி அல்லது கொட்டுதல் மூலம் நஞ்சு உட்செலுத்தப்படும் செயல்முறை ஆகும்.[1]

பாலூட்டிகள் உட்பட பல வகையான விலங்குகள் (எ. கா., வடக்கு குறுகிய வால் மூஞ்சூறு) ஊர்வன (எ. கா., இராச நாகம்[2]) சிலந்திகள் (எ. கா., கருப்பு விதவை சிலந்திகள்[3]) பூச்சிகள் (எ. கா. குளவி) மற்றும் மீன்கள் (எ. கா. கல் மீன்) தமது நஞ்சினை இரைதேடவும் தற்காப்பிற்கும் பயன்படுத்துகின்றன.

ஒரு குளவியின் கொடுக்கில் விஷத்தின் துளி

குறிப்பாக, பாம்பு கடியால் நஞ்சேற்றம் (Snakebite Envenoming) ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாக (Neglected Tropical Disease) கருதப்படுகிறது, இது ஆண்டுக்கு 1,00,000க்கு மேற்பட்ட உயிரிழப்புகளுக்கும், 4,00,000க்கும் மேற்பட்ட மக்களின் உடல்பாதிப்புகளுக்கும் (Maiming) காரணமாகிறது.[4]

செயல்பாடு

[தொகு]

சில விஷங்கள் (Venoms) வெளிப்புறமாகப் பயன்படுத்தப்படுகின்றன, குறிப்பாக கண்கள் (Eyes) போன்ற உணர்திறன் மிக்க திசுக்களில். ஆனால், பெரும்பாலான விஷங்கள் இரையை (Victim) குத்தி (Piercing) செலுத்தப்படுகின்றன. கிலா மோன்ஸ்டர் (Gila Monster) மற்றும் ஊர்வனவற்றின் (Reptiles) எச்சிலில் (Saliva) உள்ள நஞ்சு, அவற்றின் வளைந்த வரிப்பள்ளம் கொண்ட பற்களால் (Grooved Teeth) கடிப்பதன் மூலம் இரை விலங்குக்குள் ஊடுருவுகிறது.

பெரும்பாலான நச்சுயிரினங்களுக்கு, நச்சுப்பற்கள் (Fangs) அல்லது குழாய் போன்ற கொடுக்குகள் (Tubular Stingers) உள்ளன, இவை இரையின் தோலை (Skin) ஊடுருவி, நச்சுப்பையில் (Venom Reservoir) உள்ள தசைகள் இயங்க நஞ்சை இரை உயிரியின் உடலின் ஆழமான திசுக்களில் செலுத்துகிறது. உதாரணமாக, பாம்புகளின் நச்சுப்பற்கள் (Fangs), விஷச் சுரப்பிகளுடன் (Venom Glands) குழாய்கள் (Ducts) மூலம் இணைக்கப்பட்டுள்ளன. கடி (Bite) அல்லது கொட்டல் (Sting) காரணமாக இறப்பு ஏற்படலாம்.

பாம்பின் நஞ்சு ஊடுருவும் அமைப்பின் வரைபடம்

பாம்புக்கடியினால் நஞ்சேற்றம் ஏற்படும் செயல்முறைகள்

[தொகு]

பாம்புக்கடி பற்றிய மேலதிக தகவல்களுக்கு பாம்புக் கடி பக்கத்தைப் பார்க்க. பாம்புகள் (Snakes), நச்சுப்பற்கள் அல்லது விஷப்பற்கள் (Fangs) எனப்படும் சிறப்பு உறுப்புகள் மூலம் இரையின் (Target) தோலை குத்தி (Piercing) நஞ்சினைச் செலுத்துகின்றன.

பாம்பு கடியின் நான்கு முக்கிய கட்டங்கள்:

[தொகு]
  1. தாக்குதலுக்கான தொடக்கம் (Strike Launch)
  2. விஷப்பற்களின் நிலை திருத்தம் (Fang Erection)
  3. விஷப்பற்கள் தோல் ஊடுருவல் (Fang Penetration)
  4. விஷப்பற்கள் மீளெடுப்பு (Fang Withdrawal)

பாம்புகளுக்கு நச்சுச் சுரப்பி (Venom Gland) மற்றும் அதை இணைக்கும் குழாய் (Duct) மற்றும் விஷப்பற்கள் (Fangs) உள்ளன. விஷப்பற்களுக்கு உள்ளே குழாய் போன்ற கால்வாய்கள் (Hollow Tubes) கொண்டுள்ளன, மேலும் பக்கங்களில் வரிப்பள்ளங்கள் (Grooved Sides) உள்ளதால் நஞ்சு எளிதாக பாயும். பாம்பு கடிக்கும் போது, விஷப்பற்கள் (Fangs) இரையின் தோலை ஊடுருவும். விஷப்பற்களைச் சுற்றி இருக்கும் மென்மையான உறுப்பு (Fang Sheath) பின்னே நகரும், இதனால் உட்புற அழுத்தம் (Internal Pressure) அதிகரித்து, விஷ ஒழுங்காக பாய தொடங்கும். பொதுவாக பெரிய பாம்புகள் (Larger Snakes), சிறிய பாம்புகளை (Smaller Snakes) விட அதிக அளவில் விஷம் செலுத்தக்கூடியவை.

பாம்பு நஞ்சேற்றத்தின்(Snake Envenomation) வகைகள்:

[தொகு]
  1. இரைப்பிடிப்பு (Predatory) – இரையை வேட்டையாட பயன்படுத்தப்படுத்தல்.
  2. தற்காப்பு (Defensive) – ஆபத்திலிருந்து தப்பிக்க பாம்பு பயன்படுத்துதல்.

நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை

[தொகு]

பாம்புக் கடியைக் கண்டறிவதென்பது எந்தவகை எதிர்நஞ்சுபயன்படுத்தப்பட வேண்டும் என்பதை தீர்மானிப்பதில் ஒரு முக்கியமான படியாகும். ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் சுமார் 20 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர் அவற்றில் சுமார் 1 லட்சம் இறப்புகள் ஏற்படுகின்றன.[5]

பல்வேறு நச்சு எதிர்ப்பு சிகிச்சைகள் வழக்கில் உள்ளன, பெரும்பாலான எதிர்நஞ்சு மருந்துகள் (Antivenom Treatments), பாம்பு விஷத்தைக் குறைக்கும் எதிர்ப்பொருட்கள் (Antibodies or Antibody Fragments) கொண்டு தயாரிக்கப்படுகின்றன. குழிவிரியன்கள் (Pit Vipers) மற்றும் பவளப் பாம்புகள் (Coral Snakes) போன்ற சில வகைப் பாம்புகளுக்கு தனித்துவமான எதிர்நஞ்சு தேவைப்படும். எதிர்நஞ்சு சிகிச்சை (Antivenom Therapy), நஞ்சினால் ஏற்படும் இரத்தக் கசிவு (Hemorrhaging) மற்றும் உறைவு சீர்கேடு (Coagulation Effects) ஆகியவற்றை சீராக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.[1]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 WEINSTEIN, SCOTT A.; DART, RICHARD C. (15 October 2009). "Envenomations: An Overview of Clinical Toxinology for the Primary Care Physician". American Family Physician 80 (8): 793–802. பப்மெட்:19835341. http://www.aafp.org/afp/2009/1015/p793.html. 
  2. Maduwage, Kalana; O'Leary, Margaret A.; Isbister, Geoffrey K. (2014). "Diagnosis of snake envenomation using a simple phospholipase A2 assay". Scientific Reports 4: 4827. doi:10.1038/srep04827. பப்மெட்:24777205. Bibcode: 2014NatSR...4.4827M. 
  3. GRAUDINS, A., M. J. LITTLE, S. S. PINEDA, P. G. HAINS, G. F. KING et al., 2012 Cloning and activity of a novel α-latrotoxin from red-back spider venom. Biochemical Pharmacology 83: 170–183.
  4. Gutiérrez, José María; Calvete, Juan J.; Habib, Abdulrazaq G.; Harrison, Robert A.; Williams, David J.; Warrell, David A. (2017-09-14). "Snakebite envenoming" (in en). Nature Reviews Disease Primers 3 (1): 17063. doi:10.1038/nrdp.2017.63. பன்னாட்டுத் தர தொடர் எண்:2056-676X. பப்மெட்:28905944. 
  5. Maduwage, Kalana; O'Leary, Margaret A.; Isbister, Geoffrey K. (2014). "Diagnosis of snake envenomation using a simple phospholipase A2 assay". Scientific Reports 4: 4827. doi:10.1038/srep04827. பப்மெட்:24777205. Bibcode: 2014NatSR...4.4827M. 

வெளி இணைப்புகள்

[தொகு]
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சேற்றம்&oldid=4200154" இலிருந்து மீள்விக்கப்பட்டது