உள்ளடக்கத்துக்குச் செல்

நிக்கராகுவா கால்வாய் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிக்கராகுவா கால்வாய் மற்றும் மேம்பாட்டுத் திட்டம்
நிக்கராகுவா கால்வாய் திட்டம் (2014) (நீல நிறக் கோடுகள்). நட்சத்திரங்கள் முன்மொழியப்பட்ட பிரிட்டோ மற்றும் கமிலோ பூட்டுகளை குறிக்கிறது. சிவப்புக் கோடுகள் நிக்கராகுவா (மேல்)-கோஸ்ட்டா ரிக்கா (கீழ்) எல்லைகள்
விவரக்குறிப்புகள்
நீளம்270 km (170 மைல்கள்)
நிலைகைவிடப்பட்டது.[1][2]
வரலாறு
முதல் உரிமையாளர்ஆங்காங்கு நிக்கராகுவா கால்வாய் மேம்பாட்டு முதலீட்டு நிறுவனம்
செயல் தேதி2013
புவியியல்
ஆரம்ப புள்ளிபிரிட்டோ ஆறு
முடிவுப் புள்ளிநீல நிலங்கள்

நிக்கராகுவா கால்வாய் மற்றும் மேம்பாட்டுத் திட்டம் (Nicaraguan Canal and Development Project), பனமா கால்வாய் போன்று நிக்கராகுவா நாட்டில் வணிகக் கப்பல் போக்குவரத்திற்காக, கரிபியக் கடலையும், பசிபிக் பெருங்கடலையும் கால்வாய்கள் வெட்டி இணைக்கும் பெருந் திட்டமாகும். இத்திட்டத்தினை சீனாவின் ஆங்காங்கு நிக்கராகுவா கால்வாய் மேம்பாட்டு முதலீட்டு நிறுவனம் நிதியுதவி செய்ய உள்ளது.இக்கால்வாய் வெட்டும் திட்டத்திற்கு பிரிட்டோ ஆறு மற்றும் நிக்கராகுவா ஏரிகள் பயன்படுத்தப்பட உள்ளது.[3]திட்டமிடப்பட்டுள்ள கால்வாயின் நீளம் 270 கிலோ மீட்டர் (170 மைல்கள்) ஆகும். இக்கால்வாய் திட்டம் பசிபிக் பெருங்கடலில் கலக்கும் பிரிட்டோ ஆற்றிலிருந்து, நிக்கராகுவா ஏரி வரையும், பின்னர் நிக்கராகுவா ஏரியிலிருந்து கரிபியக் கடல் வரையும் செயல்படுத்தப்பட உள்ளது.

எதிர்ப்புகள்

[தொகு]

இத்திட்டத்தால் நடு அமெரிக்காவின் முதன்மை நீர் நிலையான நிக்கராகுவா ஏரிக்கு சுற்றுச்சூழல் பாதிப்புக்கு உள்ளாகும் என அறிவியல் அறிஞர்கள் எடுத்துரைத்தனர்.[3] மேலும் கப்பல் போக்குவரத்து நிபுணர்கள் மற்றும் பொறியாளர்களால் திட்டத்தின் நம்பகத்தன்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது.[4]

திட்டம் கைவிடல்

[தொகு]

மே 2024ல் நிக்கராகுவா சட்டமன்றம் இக்கால்வாய் திட்டத்திற்கு முதலீடு செய்யும் ஆங்காங்கு நிக்கராகுவா கால்வாய் மேம்பாட்டு முதலீட்டு நிறுவனத்திற்கு சலுகைகள் வழங்க மறுத்து விட்டது.[5]இதனால் நிக்கராகுவா கால்வாய் திட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Incertidumbres financieras desvanecen sueño de canal en Nicaragua" (in Spanish). AFP. 21 February 2018. https://www.elfinancierocr.com/economia-y-politica/incertidumbres-financieras-desvanecen-sueno-de/7HFF44CY3RBVVE7BR3YRKJ3XZY/story/. 
  2. "Le projet de canal du Nicaragua prend l'eau" (in French). 21 February 2018. http://www.lefigaro.fr/societes/2018/02/21/20005-20180221ARTFIG00190-le-projet-de-canal-du-nicaragua-prend-l-eau.php. 
  3. 3.0 3.1 Passary, Sumit (5 March 2015). "Scientists wary about environmental effects of canal-building project in Nicaragua". Tech Times. Retrieved 11 March 2015.
  4. McDonald, Michael D. (March 17, 2016). "China slowdown not holding back Nicaragua canal, contractor says". BloombergBusiness. https://www.bloomberg.com/news/articles/2016-03-17/china-slowdown-not-holding-back-nicaragua-canal-contractor-says. 
  5. Nicaragua cancels a controversial Chinese inter-oceanic canal concession after nearly a decade Los Angeles Times 8 May 2024. Retrieved 13 May 2024