நியூலாந்து (நாகாலாந்து)
தோற்றம்
நியூலாந்து | |
---|---|
மாவட்டத் தலைமையிடம் & பேரூராட்சி | |
![]() நியூலாந்து நகரம் | |
வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் நியூலாந்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 25°54′32″N 93°59′24″E / 25.9089°N 93.9899°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | நாகாலாந்து |
மாவட்டம் | நியூலாந்து மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,158 |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 797109 |
இணையதளம் | https://niuland.nic.in/ |
நியூலாந்து (Niuland), வடகிழக்கு இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் உள்ள நியூலாந்து மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் பேரூராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான கோகிமாவிற்கு வடமேற்கே 80.8 கிலோமீட்டர் தொலைவிலும் திமாப்பூருக்கு கிழக்கே 33.9 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் சூமி பழங்குடி நாகா மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர்.[1]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 238 குடியிருப்புகள் கொண்ட நியூலாந்தின் மக்கள் தொகை 1158 ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் பழங்குடிகள் 946 உள்ளனர். மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 14.77% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 946 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 93.62% ஆக உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Niuland district formally inaugurated". Eastern Mirror. 29 June 2022.
- ↑ "Niuland Village Population - Niuland - Dimapur, Nagaland". www.census2011.co.in. Retrieved 2025-04-13.