நிர்மலா ராமச்சந்திரன்
நிர்மலா ராமச்சந்திரன் | |
|---|---|
| பிறப்பு | நிர்மலா விசுவநாதன் 9 பெப்ரவரி 1936 மயிலாப்பூர், பிரித்தானிய இந்தியா |
| இறப்பு | 23 பெப்ரவரி 2011 (அகவை 75) சென்னை, தமிழ்நாடு |
| தேசியம் | |
| பணி | பரத நாட்டியக் கலைஞர், நடன ஆசிரியர் |
| பெற்றோர் |
|
| வாழ்க்கைத் துணை | எஸ். இராமச்சந்திரன் |
| பிள்ளைகள் | 2 |
| விருதுகள் | சங்கீத நாடக அகாதமி விருது (2004) |
நிர்மலா ராமச்சந்திரன் (Nirmala Ramachandran) தமிழ்நாட்டின் மயிலாப்பூரைச் சேர்ந்த பரதநாட்டிய நடனக் கலைஞர் ஆவார். 2004-ஆம் ஆண்டில், பரதநாட்டியத் துறையில் இவர் செய்த பங்களிப்புகளுக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.
வாழ்க்கை வரலாறு
[தொகு]நிர்மலா விசுவநாதன் 1936 ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி தமிழ்நாட்டின் மயிலாப்பூரில் பிறந்தார்.[1][2] தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நீடாமங்கலத்தைச் சேர்ந்த நிர்மலாவின் தந்தை விசுவநாதன் ஒரு தொழிலதிபர் ஆவார்.இவரது தாயார் சிவகாமுவுக்கு இசை மற்றும் நடனம் மீது ஆர்வம் இருந்தது. மயிலாப்பூரில் வாழ்ந்த நடனக் கலைஞர் மயிலாப்பூர் கௌரி அம்மாளுடன் இருந்த சிவகாமுவின் தொடர்பு, இவரை கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியத்துடன் நெருக்கமாகக் கொண்டு வந்தது. நிர்மலா வெளிநாட்டில் பணியமர்த்தப்பட்ட ஏர் இந்தியா அதிகாரியான இராமச்சந்திரன் என்பவரை மணந்தார்.[3]
நிர்மலா, மயிலாப்பூர் கௌரி அம்மாள் மற்றும் பாண்டநல்லூர் சொக்கலிங்கம் பிள்ளை ஆகியோரின் கீழ் தனது ஆரம்பகால பரதநாட்டியப் பயிற்சியை செய்தார்.[4] 1947 ஆம் ஆண்டில், இவரது 11 வயதில் இவரது அரங்கேற்றம் நடைபெற்றது.[3]
கருநாடக இசையின் மீது ஆர்வம் கொண்ட நிர்மலா, 1956 ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் சென்னை இராணி மேரி கல்லூரியில் கருநாடக இசையில் இளங்கலை பட்டம் பெற்றார். பின்னர், கே. வி. நாராயணசுவாமி மற்றும் டி. முக்தா ஆகியோரின் கீழ் தனது மேம்பட்ட பயிற்சியை மேற்கொண்டார்.[3][4]
தனிப்பட்ட வாழ்க்கையும் இறப்பும்
[தொகு]1958 ஆம் ஆண்டில் அவர் ஏர் இந்தியா அதிகாரியான எஸ். இராமச்சந்திரனை மணந்தார்.[4] இந்த தம்பதியினருக்கு மருத்துவர் இராம் கோபாலகிருஷ்ணன் மற்றும் சித்தார்த்தா ராமச்சந்திரன் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.[4] நிர்மலா இராமச்சந்திரன் பிப்ரவரி 23,2011 அன்று தமிழ்நாட்டின் சென்னையில் காலமானார்.[4]
தொழில் வாழ்க்கை
[தொகு]புகழ்பெற்ற நடனக் கலைஞர் தஞ்சாவூர் பாலசரஸ்வதியின் நடன நிகழ்ச்சியில் பங்கேற்க நிர்மலாவிற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் சாரங்கபாணி ஐயங்காரோ அல்லது இவரது குரு சொக்கலிங்கம் பிள்ளையோ அதற்கு ஆதரவாக இருக்கவில்லை.[4] இது பின்னர் சொக்கலிங்கம் பிள்ளையுடனும் அவரது பந்தநல்லூர் நடன பாணியுடனும் விரிசலுக்கு வழிவகுத்தது. திருவலப்புத்தூர் சுவாமிநாத பிள்ளையின் கீழ் நடனம் கற்க வாய்ப்பு அளித்ததன் மூலம் பந்தநல்லூர் நடன பாணிக்குத் திரும்புவதற்கு ஈ. கிருஷ்ண ஐயர் இவருக்கு உதவினார்.[4] 1954 டிசம்பர் 28 அன்று மியூசிக் அகாதெமியில் ஒரு முறை முழு நீள நகழ்ச்சியை நிகழ்த்தினார்.[5]
தனது கணவர் இராமச்சந்திரனுடன் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த நிர்மலா, தனது கலை வாழ்க்கையைத் தொடர்ந்தார். மேலும் தனது நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள் மற்றும் வகுப்புகள் மூலம் அந்த நாடுகளில் பரதநாட்டியக் கலையை பரப்பினார்.[3] 1987-88-ல் சோவியத் ஒன்றியத்தில் நடந்த இந்திய விழா உட்பட உலகெங்கிலும் உள்ள பல்வேறு இடங்களில் இவர் நிகழ்ச்சிகளை நிகழ்த்தினார்.[3]
பரதநாட்டிய ஆசிரியரான நிர்மலா ராமச்சந்திரன், தனது நிறுவனமான நிர்மலா நிகேதன் மூலம் பல நடனக் கலைஞர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.[6]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]2001 ஆம் ஆண்டில் நிர்மலா சென்னை மியூசிக் அகாதெமியிலிருந்து விருது பெற்றார்.[5] 2004 ஆம் ஆண்டில், பரதநாட்டியத்திற்காக சங்கீத நாடக அகாதமி விருதைப் பெற்றார்.[6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Epitome of grace" (in en-IN). தி இந்து. 10 March 2011. https://www.thehindu.com/features/friday-review/dance/Epitome-of-grace/article14943238.ece.
- ↑ "MYLAPORE TIMES - Obit: Nirmala Ramachandran". MYLAPORE TIMES. 25 February 2011. https://www.mylaporetimes.com/2011/02/obit-nirmala-ramachandran/.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 "Epitome of grace" (in en-IN). தி இந்து. 10 March 2011. https://www.thehindu.com/features/friday-review/dance/Epitome-of-grace/article14943238.ece."Epitome of grace". The Hindu. 10 March 2011.
- ↑ 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 "MYLAPORE TIMES - Obit: Nirmala Ramachandran". MYLAPORE TIMES. 25 February 2011. https://www.mylaporetimes.com/2011/02/obit-nirmala-ramachandran/."MYLAPORE TIMES - Obit: Nirmala Ramachandran". MYLAPORE TIMES. 25 February 2011.
- ↑ 5.0 5.1 "Kamala, the queen" (in en-IN). The Hindu. 2011-03-17. https://www.thehindu.com/features/friday-review/history-and-culture/Kamala-the-queen/article14950869.ece.
- ↑ 6.0 6.1 "Wayback Machine" (PDF). sangeetnatak.gov.in. Archived from the original (PDF) on 2025-05-20. Retrieved 2025-07-03.