நீர் தூய்மையாக்கம்
தோற்றம்

நீர் தூய்மையாக்கம் (Water purification) என்பது, நீரில் உள்ள மாசுக்களை அகற்றி, மனிதர்களின் குடிநீர்த் தேவைக்குப் பொருத்தமான அளவுக்கு அதனைத் தூய்மை ஆக்குவதையோ அல்லது தொழில் துறைத் தேவைகளுக்கு ஏற்ப அவற்றைத் தூய்மைப் படுத்துவதையோ குறிக்கும். நீரிலிருந்து அகற்றப்படவேண்டிய மாசுக்கள், ஒட்டுண்ணிகள், பக்டீரியாக்கள், அல்காக்கள், வைரசுகள், பங்கசுக்கள், கனிமங்கள் என்பவற்றை உள்ளடக்குகின்றன. இவற்றுட் சில உடல் நலத்துக்குக் கெடுதி விளைவிக்கக் கூடியவை. வேறு சில, சுவை, மணம், தோற்றம் போன்ற அம்சங்களில் நீரின் தரத்தைக் கூட்டுவதற்காக அகற்றப்படுகின்றன. தூய்மையாக்கத்தின் இறுதியில், சிறிதளவு தொற்று நீக்கி சேர்க்கப்படுவது வழக்கம். நீர் வழங்கல் வலையமைப்புக்களில் அது மீண்டும் மாசடையாமல் தடுப்பதே இதன் நோக்கமாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ McGuire, Michael J.; McLain, Jennifer Lara; Obolensky, Alexa (2002). Information Collection Rule Data Analysis. Denver: AWWA Research Foundation and American Water Works Association. pp. 376–378. ISBN 9781583212738.
- ↑ "Aeration and gas stripping" (PDF). Archived from the original (PDF) on 12 July 2014. Retrieved 29 June 2017.
- ↑ "Water Knowledge". American Water Works Association. Retrieved 29 June 2017.
வெளி இணைப்புகள்
[தொகு]- American Water Works Association
- "Water On Tap: What You Need To Know." – Consumer Guide to Drinking Water in the US (EPA)
- Emergency Disinfection of Drinking Water – Camping, Hiking and Travel (CDC)
- Code of Federal Regulations, Title 40, Part 141 பரணிடப்பட்டது 8 பெப்ரவரி 2009 at the வந்தவழி இயந்திரம் – U.S. National Primary Drinking Water Regulations