மகாகாசியபர்
| மூத்த பிக்கு மகாகாசியபர் | |
|---|---|
|  | |
| சுய தரவுகள் | |
| பிறப்பு | பிப்பாலி ஏறத்தாழ கிமு 603 அல்லது 520 | 
| இறப்பு | ஏறத்தாழ கிமு 460 அல்லது 380 குர்பா மலை, மகத நாடு | 
| சமயம் | பௌத்தம் | 
| பெற்றோர்(s) | நியாகோரதா கபிலர் (தந்தை), சுமனாதேவி (தாய்) | 
| பாடசாலை | தேரவாதம், ஜென் பௌத்தம் | 
| அறியப்படுதல் | முதலாம் பௌத்த சங்கததின் தலைவர்; பிக்குகள் கடைபிடிக்க வேண்டிய துறவற நெறிகளை வகுத்தவர். | 
| வேறு பெயர்(கள்) | தூதராஜன்[1] | 
| பதவிகள் | |
| Teacher | கௌதம புத்தர் | 
| பின் வந்தவர் | ஆனந்தர் | 
| மாணவர்கள் 
 | |

மகாகாசியபர் (Mahākāśyapa) (சமசுகிருதம்; பாலி: Mahākassapa; ஜப்பான்: 摩訶迦葉 Maha Kasho or Makakasho or Kāśyapa) புத்தரின் பத்து முதன்மை சீடர்களில் ஒருவர். மகாகாசியபர் கௌதம புத்தரிடமிருந்து முதலில் ஞானத்தை பெற்றவர்[2] இவரே முதலாம் பௌத்த சங்கத்தின் பிக்குகளின் பேரவையை கூட்டியவர். பிக்குகள் கடைபிடிக்க வேண்டிய துறவற நெறிகளை வகுத்தவர். [3]இவர் வட இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்தவர்.
தொன்ம வரலாறு
[தொகு]வேதிய சமூகத்தைச் சார்ந்த துறவியான மகாகாசியபர், புத்தர் ஞானம் பெற்றவுடன், புத்தரின் முதல் சீடராகி சாரநாத்தில் மக்கள் முன்னிலையில் புத்தர் ஆற்றிய முதல் சொற்பொழிவில் கலந்து கொண்டவர். இவரும் புத்தரின் வேறு முதன்மை சீடரான ஆனந்தருடன் அறியப்படுபவர்.
தாமரை சூத்திரம்
[தொகு]தாமரை சூத்திரம் (Lotus Sutra) அத்தியாயம் ஆறில் மகாகாசியபர், மௌத்கல்யாயனர், காத்தியாயனர் போன்ற புத்தரின் முதன்மைச் சீடர்கள் ஞானம் பெற்ற நிகழ்வு கூறப்படுகிறது.
ஜென் புத்த சமயப் பிரிவு
[தொகு]மகாகாசியபரின் போதனை அடிப்படையில் போதி தருமன் துவக்கியதாக கருதப்படும் ஜென் பௌத்தம் தோன்றியது.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Tournier 2014, ப. 27.
- ↑ "Dharma Transmission". Sweeping Zen. Archived from the original on செப்டம்பர் 29, 2013. Retrieved June 7, 2012. {{cite web}}: Check date values in:|archive-date=(help)
- ↑ Dhutanga
- ↑ Suzuki, Daisetz (1961). Essays in Zen Buddhism. Grove Press. p. 60. ISBN 0802151183.
வெளி இணப்புகள்
[தொகு]- Mahā Kassapa (subtitle) Father of the Sangha பரணிடப்பட்டது 2005-02-07 at the வந்தவழி இயந்திரம், Hellmuth Hecker, biography based on the Pali Canon, revised and enlarged translation from Wissen und Wandel volume XXI number 6, 1975, (German) by Nyanaponika Thera, The Wheel Publication No. 345, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 955-24-0026-0
 
	

