மகாராஜ்கஞ்சு
மகாராஜ்கஞ்ச் | |
---|---|
இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மகாராஜ்கஞ்ச் நகரத்தின் அமைவிடம் | |
ஆள்கூறுகள்: 27°08′N 83°34′E / 27.13°N 83.57°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | உத்தரப் பிரதேசம் |
மாவட்டம் | மகாராஜ்கஞ்சு மாவட்டம் |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 33,930 |
மொழி | |
• அலுவல் மொழி | இந்தி மொழி[1] |
• கூடுதல் அலுவல் மொழி | உருது |
• வட்டார மொழி | போச்புரி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 273303 |
வாகனப் பதிவு | UP-56 |
இணையதளம் | https://maharajganj.nic.in/ |
மகாராஜ்கஞ்ச் (Maharajganj), இந்தியாவின் உத்தரப் பிரதேசம் மாநிலத்தின் பூர்வாஞ்சல் பிரதேசத்தில், நேபாளம் எல்லையை ஒட்டி அமைந்த மகாராஜ்கஞ்ச் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் பேரூராட்சி ஆகும். இது உத்தரப் பிரதேச மாநிலத் தலைநகரான லக்னோவிற்கு வடகிழக்கே 326.9 கிலோ மீட்டர் தொலைவிலும்;கோரக்பூருக்கு வடக்கே 56.3 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரம் மகராஜ்கஞ்ச் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10 வார்டுகளும், 1,037 குடியிருப்புகளும் கொண்ட மகாராஜ்கஞ்ச் பேரூராட்சியின் மக்கள் தொகை 6,673 ஆகும். அதில் 3,485 ஆண்கள் மற்றும் 3,188 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.05 % வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 923 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு வீதம் 80.75 % உள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 13.59 % மற்றும் 0% வீதம் உள்ளனர். இந்நகரத்தில் இந்து சமயத்தினர் 64.08%, இசுலாமியர் 34.08%, கிறித்தவர்கள், சீக்கியர்கள் 1.03% மற்றும் பிற சமயத்தினர் 0.80% வீதம் உள்ளனர்.[2]
போக்குவரத்து
[தொகு]தொடருந்து நிலையம்
[தொகு]மகாராஜ்கஞ்ச் தொடருந்து நிலையத்திலிருந்து[3]சாப்ரா, கோரக்பூர் போன்ற நகரங்களுக்கு பயணிகள் வண்டிகள் செல்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. Retrieved 16 May 2019.
- ↑ Maharajganj Town Population Census 2011
- ↑ MGZ/Maharajganj