உள்ளடக்கத்துக்குச் செல்

மகாராஷ்டிரா சுயராஜ்ய கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மகாராஷ்டிர சுயராஜ்ய கட்சி
தலைவர்காட்ஃப்ரே பிமென்டா
தொடக்கம்செப்டம்பர் 2014
தலைமையகம்மும்பை
தேர்தல் சின்னம்
7 கதிர்கள் கொண்ட முள்
இணையதளம்
www.mahaswaraj.com
இந்தியா அரசியல்

மகாராஷ்டிர சுயராஜ்ய கட்சி (Maharashtra Swaraj Party) என்பது இந்தியாவின் மும்பையில் கிறித்தவ சமூகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு பிராந்திய அரசியல் கட்சி. [1] கிழக்கு இந்திய சுதந்திரப் போராளியும், மும்பையின் முதல் இந்திய மேயரான ஜோசப் 'காக்கா' பாப்டிஸ்டாவும் உருவாக்கிய "ஸ்வராஜ் என் பிறப்புரிமை" என்ற சொற்றொடரிலிருந்து கட்சியின் பெயர் உத்வேகம் பெற்றது. காகா பாப்டிஸ்டாவின் நெருங்கிய கூட்டாளி லோக்மானிய திலகரால் இத்தொடர் பரவியது.[2] கிழக்கு இந்திய சமூகத்தை பிரதி நிதித்துவப்படுத்தும் நோக்கில் இந்த அமைப்பு பல்வேறு உள்ளூர் தன்னார்வ தொண்டு நிறுவனங்களான வாட்ச்டாக் அறக்கட்டளை, மொபாய் கோதன் பஞ்சாயத்து, மும்பை கிழக்கிந்திய சங்கம், வகோலா மேம்பட்ட இருப்பிட மேலாண்மை, கலினா சிவிக் மன்றம் மற்றும் கொலவரி நலன்புரி சங்கம் ஆகியவற்றால் தொடங்கப்பட்டது.[3] இக்கட்சியின் திட்டங்கள் மகாராஷ்டிராவின் மற்ற பகுதிகளுக்கும் விரிவடைகின்றன.

2014 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்

[தொகு]

13 வது மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலில் மும்பையின் புறநகர்ப் பகுதியிலிருந்து ஐந்து வேட்பாளர்களை கட்சி நிறுத்தியது. பின் இந்த அமைப்பு ஒரு அரசியல் கட்சியாக பதிவு செய்யப்படாததால் வேட்பாளர்கள் சுயேச்சைகளாக களமிறக்கப்பட்டனர்.

கட்சியால் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களின் பெயர்கள் பின்வருமாறு: [4]

  • வழக்கறிஞர் காட்ஃப்ரே பிமென்டா - வைல் பார்லே சட்டமன்றத் தொகுதி
  • வழக்கறிஞர் விவியன் டி’சோசா - கலினா சட்டமன்றத் தொகுதி
  • வழக்கறிஞர் ஷேன் கார்டோஸ் - பாந்த்ரா (வ) சட்டமன்றத் தொகுதி
  • ஆஷிஷ் பெர்னாண்டஸ் - தஹிசர் சட்டமன்றத் தொகுதி
  • டோனி டிசோசா - மலாட் (வ) சட்டமன்றத் தொகுதி.

குறிப்புகள்

[தொகு]
  1. "East Indian party to field 5 candidates from suburbs". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 18 September 2014. Retrieved 26 September 2014.
  2. "Kaka Baptista". East Indian Community. Retrieved 19 October 2014.
  3. "MSP announces candidate list for assembly elections". I am in DNA of India. 23 September 2014. Archived from the original on 27 September 2014. Retrieved 26 September 2014.
  4. "East Indian candidates will break Congress' Christian vote in Mumbai". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 September 2014. Retrieved 26 September 2014.