உள்ளடக்கத்துக்குச் செல்

மாகிர்வாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாகிர்வாத்தில் பாயும் ஆறு

மாகிர்வாத் (Mawkyrwat), வடகிழக்கு இந்தியாவின் மேகாலயா மாநிலத்தில் உள்ள தென்மேற்கு காசி மலை மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், கிராம ஊராட்சியும் ஆகும். இது மாநிலத் தலைநகரான சில்லாங்கிற்கு தென்மேற்கே 74.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011ஆம் ஆண்டின் இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 261 குடியிருப்புகள் கொண்ட மாகிர்வாத் கிராம ஊராட்சியின் மக்கள் தொகை 1666 ஆகும். அதில் 804 ஆண்கள் மற்றும் 862 பெண்கள் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 15.25% வீதம் உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 1072 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 94.62% ஆக உள்ளது. இதன் மக்கள் தொகையில் அனைவரும் பட்டியல் பழங்குடிகள் ஆவார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாகிர்வாத்&oldid=4251339" இலிருந்து மீள்விக்கப்பட்டது