1,3-இருமெத்திலிமிடசோலியம் நைட்ரேட்டு
![]() | |
இனங்காட்டிகள் | |
---|---|
941584-21-0 ![]() | |
ChemSpider | 29322878 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 86109826 |
| |
பண்புகள் | |
C5H9N3O3 | |
வாய்ப்பாட்டு எடை | 159.15 g·mol−1 |
உருகுநிலை | 60–62 °C (140–144 °F; 333–335 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
1,3-இருமெத்திலிமிடசோலியம் நைட்ரேட்டு (1,3-Dimethylimidazolium nitrate) என்பது C5H9N3O3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இமிடாசோல் அடிப்படையிலான அயனி திரவங்களின் வகுப்பிற்குள் இது ஒரு கரைப்பான் ஆகும். 1,3-டைமெத்திலிமிடசோலியம் என்ற பெயராலும் இச்சேர்மம் அறியப்படுகிறது. இது இரண்டு நைட்ரசன் அணுக்களும் மூன்று கார்பன் அணுக்களாலும் ஆன ஐந்து-உறுப்பு வளைய அரோமாட்டிக் நேர்மின் அயனியாகும். 1,3-இருமெத்திலிமிடசோலியம் நைட்ரேட்டில் மெத்தில் குழுக்கள் முறையே நைட்ரசன் அணுக்களின் 1 மற்றும் 3 நிலைகளில் பதிலீடு செய்யப்படுகின்றன. நைட்ரேட்டு அயனி என்பது ஒரு நைட்ரசன் அணு மற்றும் மூன்று ஆக்சிசன் அணுக்களால் வகைப்படுத்தப்படும் ஒரு பல்லயனி இனமாகும்.
1,3-இருமெத்திலிமிடசோலியம் நைட்ரேட்டு சேர்மத்தின் வெப்ப இயக்கவியல் பண்புகள் கிடைக்கவில்லை. ஏனெனில் இது வேகமான மற்றும் பெரும்பாலும் கட்டுப்படுத்த முடியாத வேதியியல் சிதைவை வெளிப்படுத்துகிறது. அதன் உருகுதல் மற்றும் சிதைவு வெப்பநிலை போன்றவை வரையறுக்கப்பட்ட தரவு மட்டுமேயாகும்.[2] வெப்பச் சிதைவு இயக்கவியலைப் புரிந்துகொள்ள வகையீட்டு அலகீடு வெப்ப அளவியல் மற்றும் வெப்பவிய எடை அளவறி பகுப்பாய்வு செய்யப்பட்டுள்ளன.[3] தண்ணீருடனான சில தொடர்புகளை ஆராய கணக்கீட்டு முறைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.[4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CAS 941584-21-0 1,3-diMethylImidazolium Nitrate - Alfa Chemistry". www.alfa-chemistry.com.
- ↑ Wang, R.; Gao, H.; Ye, C.; Twamley, B.; Shreeve, J. (2007). "Heterocyclic-based nitrodicyanomethanide and Dinitrocyanomethanide salts: A family of new energetic ionic liquids". Inorganic Chemistry (American Chemical Society) 46 (3): 932–938. doi:10.1021/ic0619198. பப்மெட்:17257037. https://pubs.acs.org/doi/10.1021/ic0619198. பார்த்த நாள்: February 3, 2024.
- ↑ Liu, S.-H.; Zhang, B. (2019). "Using thermal analysis technology to assess the thermal stability of 1,3-dimethylimidazolium nitrate". Process Safety and Environmental Protection (Elsevier) 124: 181–186. doi:10.1016/j.psep.2019.02.012. Bibcode: 2019PSEP..124..181L. https://www.sciencedirect.com/science/article/abs/pii/S0957582018310747. பார்த்த நாள்: February 3, 2024.
- ↑ Solovyova, I. V.; Yang, S.; Starovoytov, O. N. (2023). "Molecular dynamics simulation studies of 1, 3-dimethylimidazolium nitrate ionic liquid with water". Journal of Chemical Physics (AIP Publishing) 158 (8): 084505. doi:10.1063/5.0134465. பப்மெட்:36859108. Bibcode: 2023JChPh.158h4505S. https://pubs.aip.org/aip/jcp/article-abstract/158/8/084505/2869002/Molecular-dynamics-simulation-studies-of-1-3?redirectedFrom=fulltext. பார்த்த நாள்: February 3, 2024.