2-நாப்தால்
![]() | |
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
Naphthalen-2-ol | |
வேறு பெயர்கள்
2-ஐதராக்சிநாப்தலீன்; 2-நாப்தலீனால்; பீட்டா-நாப்தால்; நாப்த்-2-ஆல்
| |
இனங்காட்டிகள் | |
135-19-3 ![]() | |
Beilstein Reference
|
742134 |
ChEBI | CHEBI:10432 ![]() |
ChEMBL | ChEMBL14126 ![]() |
ChemSpider | 8341 ![]() |
EC number | 205-182-7 |
Gmelin Reference
|
27395 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
KEGG | C11713 ![]() |
பப்கெம் | 8663 |
வே.ந.வி.ப எண் | QL2975000 |
| |
UNII | P2Z71CIK5H ![]() |
UN number | 3077 |
பண்புகள் | |
C10H8O | |
வாய்ப்பாட்டு எடை | 144.17 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற படிகம், திண்மம் |
அடர்த்தி | 1.280 கி/செ.மீ3 |
உருகுநிலை | 121 முதல் 123 °C (250 முதல் 253 °F; 394 முதல் 396 K) |
கொதிநிலை | 285 °C (545 °F; 558 K) |
0.74 கி/லி | |
காடித்தன்மை எண் (pKa) | 9.51 |
−98.25·10−6 cm3/mol | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீங்கு விளைவிக்கும். [1] |
GHS pictograms | ![]() ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H302, H332, H400 | |
P261, P264, P270, P271, P273, P301+312, P304+312, P304+340, P312, P330, P391, P501 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 161 °C (322 °F; 434 K)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-நாப்தால் (2-Naphthol) என்பது C10H7OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மாகும். β-நாப்தால் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. 2-நாப்தால் ஓர் ஒளிரும் நிறமற்ற (அல்லது எப்போதாவது மஞ்சள்) படிக திடப்பொருளாகக் காணப்படுகிறது. நாப்தலீன் வளையத்தில் ஐதராக்சில் குழுவின் இருப்பிடத்தில் வேறுபட்டு 1-நாப்தால் என்ற மாற்றியனாகவும் உள்ளது. நாப்தால்கள் பீனாலின் நாப்தலீன் ஒப்புமைகள் ஆகும். ஆனால் இவை அதிக வினைத்திறன் கொண்டுள்ளன. இரண்டு மாற்றியன்களும் எளிய ஆல்ககால்கள், ஈதர்கள் மற்றும் குளோரோஃபார்மில் கரைகின்றன. 2-நாப்தால் என்பது சாயங்கள் மற்றும் பிற சேர்மங்களை உற்பத்தி செய்வதற்கு பரவலாகப் பயன்படுத்தப்படும் ஓர் இடைநிலை வேதிப் பொருளாகும்.
தயாரிப்பு
[தொகு]பாரம்பரியமாக, 2-நாப்தால் கந்தக அமிலத்தில் நாப்தலீனை சல்போனேற்றம் செய்வதன் மூலம் தொடங்கும் இரண்டு-படி செயல்முறை மூலம் தயாரிக்கப்படுகிறது.:[2]
- C10H8 + H2SO4 → C10H7SO3H + H2O
பின்னர் சல்போனிக் அமிலக் குழு உருகிய சோடியம் ஐதராக்சைடால் பிளவுபடுத்தப்படுகிறது:
- C10H7(SO3H) + 3 NaOH → C10H7ONa + Na2SO3 + 2 H2O
அமிலத்துடன் சேர்த்து விளைபொருளை நடுநிலையாக்கினால் 2-நாப்தால் கிடைக்கும்.
கியூமீன் செயல்முறைக்கு ஒத்த முறையிலும் 2-நாப்தாலை உற்பத்தி செய்யலாம்.[2]
2-நாப்தாலின் வழிப்பெறுதி சாயங்கள்
[தொகு]சூடான் சாயங்கள் கரிம கரைப்பான்களில் கரையக்கூடியவையாக அறியப்பட்ட பிரபலமான சாயங்கள் ஆகும். சூடான் சாயங்களில் பல ஈரசோனியம் உப்புகளுடன் இணைப்பதன் மூலம் 2-நாப்தாலில் இருந்து பெறப்படுகின்றன.[3] சூடான் சாயங்கள் I–IV மற்றும் சூடான்சிவப்பு ஜி ஆகியவை அரிலாசோ-பதிலீடு செய்யப்பட்ட நாப்தால்களைக் கொண்டுள்ளன.
- தேர்வு செய்யப்பட்ட 2-நாப்தால்-வழிப்பெறுதி சாயங்கள்
-
சூடான் I
-
சூடான் II
-
சூடான் III
-
சூடான் IV
-
எண்ணெய்ச் சிவப்பு O
-
நாப்தால் ஏ.எசு
வினைகள்
[தொகு]2-நாப்தாலின் சில வினைகள் அதன் அமைப்பு மாற்றியம் காரணமாக விளக்கப்படுகின்றன, இது ஒரு சிறிய அளவு கீட்டோ மாற்றியத்தை உருவாக்குகிறது.
இந்த அமைப்பு மாற்றியத்தின் ஒரு விளைவு புச்செரர் வினை ஆகும், அதாவது 2-நாப்தாலினின் அம்மோனியாவாற் பகுப்பு வினை 2-அமினோநாப்தலீனை அளிக்கிறது.
2-நாப்தாலை ஆக்சிசனேற்ற ரீதியாக இணைத்து பினோல் எனப்படும் 1,1′-பை-2-நாப்தால் சேர்மத்தை உருவாக்கலாம். இது சமச்சீரற்ற வினையூக்கத்தில் பயன்படுத்த பிரபலப்படுத்தப்பட்ட சி2-சமச்சீர் ஈந்தணைவியாகும்.

நியூமன்–குவார்ட் மறுசீரமைப்பு வினை வழியாக இருமெத்தில் தயோகார்பமாயில் குளோரைடுடன் வினைபுரிந்து 2-நாப்தால் 2-நாப்தலீன்தயோலாக மாறுகிறது.[4] OH→Br மாற்றம் விவரிக்கப்பட்டுள்ளது.[5]
நைட்ரோசிலேற்றம் மூலம் 1-நைட்ரோசோ-2-நாப்தால் தயாரிக்கப்படுவது போல, 1-நிலையில் எலக்ட்ரான்கவரித் தாக்குதல் சிறப்பியல்பு ரீதியாக நிகழ்கிறது.[6] புரோமினேற்றம்[7] மற்றும் ஆல்க்கைலேற்றம் வினைகள் இதேபோன்ற வேதியியலுடன் தொடர்கின்றன.[8] வளைய-திறப்பு வினைகள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.[9]
2-நாப்தாலை கார்பனேற்றம் செய்வதால் 2-ஐதராக்சி-1-நாப்தாயிக் அமிலம் கிடைக்கிறது.[2]
பாதுகாப்பு
[தொகு]2-நாப்தால் "மிதமான நச்சுத்தன்மை கொண்டது" என்று விவரிக்கப்பட்டுள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "MSDS safety data for 2-naphthol". Archived from the original on 3 மார்ச் 2011.
- ↑ 2.0 2.1 2.2 2.3 Booth, Gerald (2005), "Naphthalene Derivatives", Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Weinheim: Wiley-VCH, doi:10.1002/14356007.a17_009. full-text PDF
- ↑ Booth, Gerald; Zollinger, Heinrich; McLaren, Keith; Sharples, William G.; Westwell, Alan (2000). "Dyes, General Survey". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley-VCH. doi:10.1002/14356007.a09_073. ISBN 9783527306732.
- ↑ Melvin S. Newman; Frederick W. Hetzel (1971). "Thiophenols from Phenols: 2-Naphthalenethiol". Organic Syntheses 51: 139. doi:10.15227/orgsyn.051.0139. https://www.orgsyn.org/demo.aspx?prep=CV6P0824.
- ↑ J. P. Schaefer; Jerry Higgins; P. K. Shenoy (1969). "2-Bromonaphthalene". Organic Syntheses 49: 6. doi:10.15227/orgsyn.049.0006.
- ↑ Marvel, C. S.; Porter, P. K. (1922). "Nitroso-β-Naphthol". Organic Syntheses 2: 61. doi:10.15227/orgsyn.002.0061.
- ↑ C. Frederick Koelsch (1940). "6-Bromo-2-Naphthol". Organic Syntheses 20: 18. doi:10.15227/orgsyn.020.0018.
- ↑ Alfred Russell Luther B. Lockhart (1942). "2-Hydroxy-1-Naphthaldehyde". Organic Syntheses 22: 63. doi:10.15227/orgsyn.022.0063.
- ↑ G. A. Page, D. S. Tarbell (1954). "β-(o-Carboxyphenyl)propionic Acid". Organic Syntheses 34: 8. doi:10.15227/orgsyn.034.0008.
வெளி இணைப்புகள்
[தொகு]- NIST Chemistry WebBook 2-Naphthalenol
"Napthols". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 19. (1911). 168–169.