2-நைட்ரோசின்னமால்டிகைடு
![]() | |
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(2E)-3-(2-நைட்ரோபீனைல்)புரோப்-2-யீனால் | |
இனங்காட்டிகள் | |
1466-88-2 ![]() 66894-06-2 (E) ![]() | |
ChEMBL | ChEMBL53723 ![]() |
ChemSpider | 4518729 ![]() |
EC number | 215-988-0 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 5367122 |
| |
UNII | 72Y4RH8QTA ![]() |
பண்புகள் | |
C9H7O3N | |
தோற்றம் | வெளிர் மஞ்சள் படிகத்தூள் |
உருகுநிலை | 124 முதல் 126 °C (255 முதல் 259 °F; 397 முதல் 399 K) |
சிறிதளவு கரையும் | |
தீங்குகள் | |
GHS pictograms | ![]() |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P332+313, P337+313, P362, P403+233, P405 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-நைட்ரோசின்னமால்டிகைடு (2-Nitrocinnamaldehyde) என்பது C9H7O3N என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். ஆர்த்தோநைட்ரோசின்னமால்டிகைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. சின்னமால்டிகைடின் 1-நிலையான ஆர்த்தோ நிலையில் நைட்ரோ குழுவைக் கொண்ட ஒரு கரிம அரோமாட்டிக் சேர்மம் 2-நைட்ரோசின்னமால்டிகைடு ஆகும்.
தயாரிப்பு
[தொகு]அசிட்டிக் அமிலத்தில் உள்ள அசிட்டிக் நீரிலி கரைசலில் சின்னமால்டிகைடைக் கரைத்து, 0–5 ° செல்சியசு வெப்பநிலையில் விகிதவியல் அளவு செறிவூட்டப்பட்ட நைட்ரிக் அமிலத்தைச் சேர்ப்பதன் மூலம் 2-நைட்ரோசின்னமால்டிகைடு தயாரிக்க முடியும். கோட்பாட்டு ரீதியாக சுமார் 36-46% விளைபொருள் கிடைக்கும்.
கந்தக அமிலத்துடன் நைட்ரேட்டு உப்பைச் சேர்த்து அமிலமாக்குவதன் வழியாக சின்னமால்டிகைடை நைட்ரோயேற்றம் செய்வதன் மூலமும் ஆர்த்தோ-நைட்ரோ சேர்மம் தயாரிக்கலாம். இருப்பினும் இது பொதுவாக விரும்பத்தகாத பாரா-நைட்ரோ சேர்மத்தின் ஒரு பகுதியையும் உருவாக்குகிறது.
2-நைட்ரோசின்னமால்டிகைடை ஓர் ஒடுக்க வினையில் 2-நைட்ரோபென்சால்டிகைடுடன் அசிட்டால்டிகைடுடன் வினைபுரியச் செய்வதன் மூலமும் தயாரிக்கலாம்.[2]
பயன்கள்
[தொகு]2-நைட்ரோசின்னமால்டிகைடை 2-நைட்ரோசின்னமிக் அமிலமாக ஆக்சிசனேற்றம் செய்யலாம். இது பேயர்-எம்மர்லிங் இந்தோல் தொகுப்பில் இண்டோல் மற்றும் மாற்று இண்டோல்களை உருவாக்கப் பயன்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ http://www.21cnlab.com/chemdict/MSDS/62967.html 2-Nitrocinnamaldehyde MSDS
- ↑ "Organic Syntheses".