பட்டரவாக்கம்
தோற்றம்
பட்டரவாக்கம் | |
---|---|
பட்டரவாக்கம், சென்னை மாவட்டம், தமிழ்நாடு | |
ஆள்கூறுகள்: 13°06′37″N 80°10′02″E / 13.1103°N 80.1673°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சென்னை |
ஏற்றம் | 36.49 m (119.72 ft) |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
அஞ்சல் குறியீட்டு எண் | 600098 |
புறநகர்ப் பகுதிகள் | அம்பத்தூர், கொரட்டூர், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், சூரப்பட்டு |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சட்டமன்றத் தொகுதி | அம்பத்தூர் |
பட்டரவாக்கம் (Pattaravakkam) என்ற புறநகரானது, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னைக்கு வடமேற்கே அமைந்துள்ளது.[1]
அமைவிடம்
[தொகு]பட்டரவாக்கம், கடல் மட்டத்திலிருந்து சுமார் 36.49 மீ. உயரத்தில், (13°06′37″N 80°10′02″E / 13.1103°N 80.1673°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு அமையப் பெற்றுள்ளது.
விவரங்கள்
[தொகு]- பட்டரவாக்கம், சென்னை மாவட்டத்தில் உள்ள அம்பத்தூர் வட்டத்தில் அமைந்துள்ளது. முன்னர் இது அம்பத்தூர் நகராட்சிப் பகுதியாக இருந்தது. தற்போது இது சென்னை மாநகராட்சியின் அம்பத்தூர்மண்டல எண் 7-இல் உள்ளது.
- தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதி, சென்னை-மும்பை செல்லும் இருப்புப் பாதையில் அமைந்துள்ளது. இங்கு பட்டரவாக்கம் புறநகர் இரயில் நிலையம் உள்ளது.[2]
- பட்டரவாக்கம் ஊரின் அஞ்சல் குறியீட்டு எண் 600098 ஆகும். பட்டரவாக்கம் பகுதியானது, அம்பத்தூர் (சட்டமன்றத் தொகுதி) சார்ந்தது. மேலும், இப்பகுதி திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி வரம்புக்கு உட்பட்டதாகும்.[3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Rina Kamath (2000). Chennai (in ஆங்கிலம்). Orient Blackswan. ISBN 978-81-250-1378-5.
- ↑ "Pattaravakkam (ABEO) Railway Station: Station Code, Schedule & Train Enquiry - RailYatri". www.railyatri.in. Retrieved 2025-08-10.
- ↑ "Pattara Vakkam Locality". www.onefivenine.com. Retrieved 2025-08-10.