பைரவி கிராமிய நகராட்சி
பைரவி கிராமிய நகராட்சி
भैरवी गाउँपालिका | |
|---|---|
| குறிக்கோளுரை: कृषि पर्यटन हरियाली विकास र पूर्वाधार, भैरवीका चार आधार | |
| ஆள்கூறுகள்: 28°56′N 81°38′E / 28.93°N 81.63°E | |
| நாடு | |
| மாகாணம் | கர்ணாலி |
| மாவட்டம் | தைலேக் |
| வார்டுகள் | 7 |
| பரப்பளவு | |
| • மொத்தம் | 110.46 km2 (42.65 sq mi) |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 21,233 |
| • அடர்த்தி | 190/km2 (500/sq mi) |
| நேர வலயம் | ஒசநே+5:45 (நேபாள சீர் நேரம்) |
| இணையதளம் | http://www.bhairabimun.gov.np/ |
பைரவி கிராமிய நகராட்சி (Bhairabi Rural Municipality (நேபாள மொழி|भैरवी गाउँपालिका), நேபாளம் நாட்டின் கர்ணாலி மாகாணத்தில் உள்ள தைலேக் மாவட்டத்தில் அமைந்த ஒரு கிராமிய நகராட்சி மன்றம் ஆகும்.[1] இது மாவட்டத் தலைமையிடமான நாராயண் நகருக்கு வடமேற்கே 27.8 கிலோமீட்டர் தொலைவிலும்; கர்ணாலி மாகாணத் தலைநகரான விரேந்திரநகருக்கு வடக்கே 92.5 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இது இமயமலையில் 1359 மீட்டர் உயரத்தில் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2011 நேபாள மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி 7 வார்டுகளும்[2], 110.46 சதுர கிலோமீட்டர் பரப்பளவும்.[3] கொண்ட பைரவி கிராமிய நகராட்சியின் மக்கள் தொகை 21,233 ஆகும். இக்கிராமிய நகராட்சியில் நேபாள மொழி 98.6%, குரூங் மொழி 1.1% மற்றும் பிற மொழிகள் 0.1% பேரும் பேசுகின்றனர்.[4]சேத்திரி மக்கள் 32.3%ம் மலைவாழ் பிராமணர்களான பகுணி மக்கள் 15%, காமி மக்கள் 8%, தாக்கூர்கள் 5%, மகர் மக்கள் 4.7%, சர்க்கி மக்கள் 3.8%, தாமி/தோலி மக்கள் 2.5%, சன்யாசி/தசநாமி மக்கள் 2.3%, குரூங் மக்கள் 1.4% மற்றும் இசுலாமியர்கள் 0.4% வாழ்கின்றனர். [5]
இந்து சமயத்தினர் 97.3%, இசுலாமியர்கள் 1.4%, பௌத்தர்கள் மற்றும் 1.11% கிறித்தவர்கள் 0.2%.வாழ்கின்றனர். [6]சராசரி எழுத்தறிவு 60.6% ஆக உள்ளது.[7]
மீத்தேன் எரிவாயு கண்டுபிடிப்பு
[தொகு]பைரவி கிராமிய நகராட்சியில் உள்ள ஜல்ஜலே கிராமத்தில் நேபாளத்தின் சுரங்கம் & புவியியல் துறையினரின் மேற்பார்வையில் சீனாவின் புவியியலாளர்கள் 1.12 பில்லியன் கன மீட்டர் மீத்தேன் இயற்கை எரிவாயு இருப்பதாக கண்டறிந்துள்ளனர்.[8][9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "स्थानीय तहहरुको विवरण" [Details of the local level bodies]. www.mofald.gov.np/en (in நேபாளி). Ministry of Federal Affairs and Local Development. Archived from the original on 31 August 2018. Retrieved 17 July 2018.
- ↑ "District Corrected Last for RAJAPATRA" (PDF). www.mofald.gov.np. Retrieved 17 July 2018.
- ↑ "News: Municipality staffers on strike". nepalmonitor.org (in ஆங்கிலம்). Retrieved 2018-12-05.
- ↑ NepalMap Language [1]
- ↑ NepalMap Caste [2]
- ↑ NepalMap Religion [3]
- ↑ NepalMap Literacy [4]
- ↑ Huge Methane Gas Reserve Found in Western Nepal
- ↑ ‘Massive methane reserve’ in Dailekh fuels energy sufficiency hope