உள்ளடக்கத்துக்குச் செல்

கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம்


கசுதூரிபா நகர்
சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்
பொது தகவல்கள்
ஆள்கூறுகள்13°00′50″N 80°14′54″E / 13.013804°N 80.248271°E / 13.013804; 80.248271
நடைமேடைபக்க நடைமேடை
நடைமேடை-1 → வேளச்சேரி **
நடைமேடை-2 → சென்னைக் கடற்கரை
** (எதிர்கால விரிவாக்கம் பரங்கிமலை) (280 m)
இருப்புப் பாதைகள்2
கட்டமைப்பு
கட்டமைப்பு வகைஉயர்த்தப்பட்ட
வரலாறு
திறக்கப்பட்டது26 சனவரி 2004
சேவைகள்
முந்தைய நிலையம் சென்னை எம் ஆர் டி எஸ் அடுத்த நிலையம்
கோட்டூர்புரம் வழித்தடம் 1 இந்திரா நகர்
வழித்தடம் 1
(எதிர்கால சேவை)
இந்திரா நகர்
அமைவிடம்
Map

கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம் (Kasturba Nagar railway station) என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னையில் மத்திய கைலாசு பகுதியில் இராசீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள சென்னை பறக்கும் தொடருந்து திட்ட சேவை நிலையமாகும்.

வரலாறு

[தொகு]

சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தின் வலையமைப்பில் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம் 26 சனவரி 2004 அன்று திறக்கப்பட்டது. இந்நிலையம் எல் & டி நிறுவனத்தினால் கட்டப்பட்டது.[1]

அமைப்பு

[தொகு]

கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இது பக்கிங்காம் கால்வாயின் மேற்குக் கரையில் கட்டப்பட்டுள்ளது. சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டப் பாதையில் உள்ள மற்ற நிலையங்களைப் போலவே, கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையத்திலும் 2 பக்க நடைமேடைகள் உள்ளன. ஒவ்வொரு தளத்தின் நீளமும் 280 மீட்டர் ஆகும்..[2] கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 3,200 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்துடன் உள்ளது.[3]

நிலைய அமைப்பு

[தொகு]
கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலைய தடம் அமைப்பு
P2
P1
இருபக்க ஓடுபாதை நடைமேடையுடன் கூடிய நிலையம்
தத தெரு மட்டம் வெளியேறு/நுழைவு
நிலை1 இடைமாடி கட்டணக் கட்டுப்பாடு, நிலைய பயணச்சீட்டு நிலையங்கள், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள்
நிலை2 பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும்ஊனமுற்றவர் அணுகல்
நடைமேடை 2
வடக்கு நோக்கி
சென்னைக் கடற்கரை நோக்கி
அடுத்த நிலையம் கோட்டூர்புரம்
நடைமேடை 1
தெற்கு நோக்கி
வேளச்சேரி நோக்கி
அடுத்த நிலையம் இந்திரா நகர்
(எதிர்கால விரிவாக்க இணைப்பு பரங்கிமலை)
பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் ஊனமுற்றவர் அணுகல்
நிலை2

வரிசை

[தொகு]

வேளச்சேரி நோக்கிய சென்னைப் பறக்கும் தொடருந்துத் திட்டப் பாதையில் கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம் பன்னிரெண்டாவது நிலையமாகும். வேளச்சேரியிலிருந்து திரும்பும் திசையில், இது தற்போது சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய ஆறாவது நிலையமாக உள்ளது.[4]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Report No.5 of 2006 (Railways)" (PDF). cag.nic.in. Archived from the original (PDF) on 1 February 2014.
  2. "MRTS Phase-II Extension". Development of MRTS in Chennai. CMDA. Archived from the original on 15 August 2014. Retrieved 20 Aug 2012.
  3. R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai" (PDF). Traffic Transportation and Parking – Session 2. CMDA, Chennai. Archived from the original (PDF) on 2 July 2010. Retrieved 19 August 2012.
  4. "Chennai Beach – Velachery – Chennai Beach Week days service" (PDF). Southern Railways. Archived from the original (PDF) on 6 September 2012. Retrieved 18 Aug 2012.