முண்டகக்கண்ணியம்மன் கோயில் தொடருந்து நிலையம்
முண்டகக்கண்ணியம்மன் கோயில் தொடருந்து நிலையம் முண்டகக்கண்ணியம்மன் கோயில் | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பொது தகவல்கள் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 13°02′27″N 80°16′11″E / 13.0407°N 80.2698°E | ||||||||||||||
| நடைமேடை | பக்க நடைமேடை நடைமேடை-1 → வேளச்சேரி ** நடைமேடை-2 → சென்னைக் கடற்கரை ** (மேலும் விரிவாக்கம் பரங்கிமலை) | ||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||
| கட்டமைப்பு | |||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட | ||||||||||||||
| தரிப்பிடம் | உண்டு | ||||||||||||||
| வரலாறு | |||||||||||||||
| திறக்கப்பட்டது | 2014 | ||||||||||||||
| சேவைகள் | |||||||||||||||
| |||||||||||||||
| |||||||||||||||
முண்டகக்கண்ணியம்மன் கோயில் தொடருந்து நிலையம் (Mundagakanniamman Koil railway station) என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்டப் பாதையில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது பக்கிங்காம் கால்வாயின் குறுக்கே மயிலாப்பூரில் பிருந்தாவன் தெரு, முண்டகக்கண்ணி அம்மான் கோயில் தெரு அருகே அமைந்துள்ளது. இந்த நிலையம் பிரத்தியேகமாக சென்னை எம். ஆர். டி. எஸ். க்கு சேவை செய்கிறது. மேலும் வடக்கு மைலாப்பூர், சாந்தோம், இராயப்பேட்டை சுற்றுப்புறங்களுக்கு சேவை செய்கிறது.
வரலாறு
[தொகு]முண்டகக்கண்ணியம்மன் கோயில் தொடருந்து நிலையம் 18ஆவது எம்ஆர்டிஎஸ் நிலையமாகும். இந்த நிலையத்தின் பணிகள் 2002ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டன. ஆரம்ப மதிப்பீட்டு செலவு ₹85.5 மில்லியன். சென்னை எம்ஆர்டிஎஸ் வலையமைப்பில் முதல் கட்டத்தில் கூடுதலாக இந்த நிலையம் கட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 2009இல் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், நிலம் கையகப்படுத்தும் பிரச்சினைகள் காரணமாக கட்டுமானம் தாமதமானது. அடுத்த காலக்கெடு 2012 என நிர்ணயிக்கப்பட்டது. மீண்டும் நிலைய பெயருக்கான ஒப்புதல் தாமதமாகக் கிடைத்ததால் பயன்பாடு தாமதமானது. கட்டுமான செலவு ₹100 மில்லியன் ஆனது. இந்த நிலையம் 14 மே 2014 அன்று பொதுமக்களுக்காக திறக்கப்பட்டது.
நிலையத்தின் பெயரில் தேவையற்ற சர்ச்சை
[தொகு]நிலையத்தின் பெயர் குறித்தி பணிகள் முடிக்கப்படவிருந்த நேரத்தில் தேவையற்ற சர்ச்சையை ஏற்படுத்தி வந்தது. கட்டுமான செலவு ₹100 மில்லியன் வரை ஆனது.
இந்தியாவில் மும்பை புறநகர் ரயில்வேயில் மஸ்ஜித், சென்னை புறநகர் ரயில்வேயில் பரங்கிமலை போன்ற நிலையங்கள் இருந்தாலும், சில உள்ளூர் இந்து அல்லாத குடியிருப்பாளர்கள் மற்றும் அமைப்புகள் இந்த நிலையத்திற்கு இந்து தெய்வமான முண்டகக்கண்ணியம்மனின் பெயரை சூட்டுவதை எதிர்த்ததால், சூன் 2013இல் 80 சதவீதத்திற்கும் அதிகமான பணிகள் முடிந்தபோதும் நிலையம், பெயர் குறித்த தேவையற்ற சர்ச்சையில் சிக்கியது. முன்டகக்கண்ணியம்மன் தேவி கோயில் கிட்டத்தட்ட நிலையத்திற்கு அருகில் உள்ளது. இப்பகுதி அதிக எண்ணிக்கையிலான கிறித்தவ, முசுலீம் மக்களைக் கொண்ட கணேசபுரம் மற்றும் இசுலட்டர்புரத்தை உள்ளடக்கியது. நிலையத்தின் பெயர் பலகைகள் சில சமூக விரோதிகளால் வெள்ளையடித்து அழிக்கப்பட்டன. மேலும் நிலையத்தின் திறப்பு விழா, முன்பு 15 மே 2013 அன்று திட்டமிடப்பட்டது. இது ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு அரசு இந்த நிலையத்திற்கு "முண்டகக்கண்ணியம்மன் கோயில்" என்று பெயரிடப்பட்டு, கோயில் அமைந்துள்ள தெருவில் அமைந்திருப்பதால், இந்த பெயரைத் தக்க வைத்துக் கொள்ள முடிவு செய்தது.
அமைப்பு
[தொகு]இந்த நிலையம் மற்ற எம். ஆர். டி. எஸ் நிலையங்களைப் போலவே பக்கிங்காம் கால்வாயின் கரையில் கட்டப்பட்ட ஒரு உயரமான நிலையமாகும். நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 2,400 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்தினைக் கொண்டுள்ளது. இந்த நிலையத்தின் வடிவமைப்பு திருமயிலை நிலையத்தைப் போலவே உள்ளது. பக்கிங்காம் கால்வாய் பக்கவாட்டில் ஓடுவதால் இந்த நிலையத்திற்கு ஒரே ஒரு நுழைவாயில் மட்டுமே உள்ளது.
நிலைய தளவமைப்பு
[தொகு]
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| G | சாலை நிலை | நுழைவு/வெளியேறு |
| L1 | இடைமாடி | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய சீட்டு சாளரம், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் |
| L2 | பக்க நடைமேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும் | |
| நடைமேடை 2 வடக்கு நோக்கி |
→ சென்னைக் கடற்கரை நோக்கி அடுத்த நிலையம் கலங்கரை விளக்கம் | |
| நடைமேடை1 தெற்கு நோக்கி |
← வேளச்சேரி நோக்கி அடுத்த நிலையம் திருமயிலை (எதிர்கால விரிவாக்கம் பரங்கிமலை விரைவில் இணைக்கப்பட உள்ள தொடருந்து நிலையம்) | |
| பக்க நடைமேடை | கதவுகள் இடதுபுறம் திறக்கும் | ||
| L2 | ||
சேவைகளும் தொடர்புகளும்
[தொகு]வேளச்சேரி செல்லும் வழித்தடத்தில் கலங்கரை சிந்தாதிரிப்பேட்டை தொடருந்து நிலையம் நான்காவது நிலையமாகும். வேளச்சேரியிலிருந்து திரும்பும் திசையில், இது தற்போது சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய பதினைந்தாவது நிலையமாகும்.[1]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Chennai Beach – Velachery – Chennai Beach Week days service" (PDF). Southern Railways. Archived from the original (PDF) on 6 செப்டெம்பர் 2012. Retrieved 18 ஆகத்து 2012.
